பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235 ஒம திருச்சிற்றம்பலம் மாணிக்கவாசகர் வரலாறும் திருவாசகப் பாடல்களும் பாண்டிய நாட்டின் தலைநகரம் மதுரை மாநகரம். பண்டைக் காலத்தில் பாண்டி நாட்டை அரிமர்த்தன பாண்டியன் என்ற அரசன் ஆட்சி செய்து கொண்டு இருந்தான். மதுரை மாநகருக்கு அருகில் திருவாதவூர் என்ற தலம் இருக் கிறது. அவ்வூரில் அமாத்தியர் குலத்தில் ஒர் அன்பர் இருந்தார். அவருக்குத் திருவாதவூரர் என்று பெயர். அவர் கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கினர் அவரைப்பற்றி அரசன் கேள்விப்பட்டான்: பின்பு அவரைத் தன் மந்திரியாக அமர்த்திக்கொண்டான். பாண்டியனது குதிரைப் படையில் குதிரைகள் குறைந்து விட்டன. புதிய குதிரைகள் வாங்க வேண்டும்" என்று அரசனிடம் கூறப்பட்டது. அரசன் வாதவூரரிடம் நிறையப் பணம் கொடுத் தான்; குதிரைகளை வாங்கி வருமாறு அனுப்பின்ை. வாதவூரர் திருப்பெருந்துறை என்ற தலத்தை நோக்கிச் சென்ருர், வாதவூரர் சிறந்த ஞானி; இறைவனிடத்தில் அருள் மொழி பெறக்கூடிய பக்குவம் அவருக்கு வந்துவிட்டது. சிவ பெருமானும் வாதவூரருக்கு அருள் செய்ய வேண்டும் என்று நினைத் தார்; திருப்பெருந்துறையில் ஒரு குருந்த மரத்தின் நிழலில் குரு வடிவில் வந்து உட்கார்ந்தார்; அடியார்களுக்கு அருள்மொழி கூறிக்கொண்டு இருந்தார். திருப்பெருந்துறையை அடைந்த வாதவூரர் இக்காட்வியைக் கண்டார்; அந்த மெய்யறிவாசிரியர் திருவடிகளில் விழுந்து வணங் ளுெர்; மெய்யறிவுரையும் பெற்ருர், சிறந்த சிவஞானி ஆளுர்; 'நமச் வொய வாஅழ்க நாதன் தாள் வாழ்க’’ என்று பாடத் தொடங்கினர். (இதற்குச் சிவபுராணம் என்பது பெயர்). இங்ங்ணம் சிவபுராணம் பாடிய பின்னர்ப் பல திருவாசகப் பாடல்களையும் பாடினர். 'பாடல்கள் எல்லாம் மாணிக்கம்போல்