பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

237 இரவு வந்தது. குதிரைகள் எல்லாம் நரிகளாக மாறின. குதிரை லாயத்தில் இருந்த பிற குதிரைகளையும் கடித்துக் கொன்றன: ஊரில் உள்ளவர்களுக்கு எல்லாம் அச்சத்தை உண் டாக்கின; மறுபடியும் காட்டுக்கு ஓடின. இதனை அரசன் அறிந் தான்; சினங்கொண்டான், மாணிக்கவாசகரைத் துன்பப் படுத்து மாறு ஆணை இட்டான். ஏவலாளர் மாணிக்கவாசகரை வைகை ஆற்றுக்கு அழைத்துச் சென்ருர்கள்: உச்சி வேளையில் சுடுகின்ற மணலில் நிறுத்தினர்கள்; பாறையைத் தலையில் நெற்றியில் ஏற்றி ர்ைகள்; பலவிதமாகத் துன்பப்படுத்தினர்கள். மாணிக்கவாசகர் இறைவனை விளித்தார்; பாசொடு விண்ணுய்ப் பரந்த எம் பானே' என்று பாடினர். மேலும் மாணிக்கவாசகர் சோதியே சுடரே சூழொளி விளக்கே" என்ற பாடலையும் பாடினர். அப்பொழுது இறைவன் ஆணைப்படி வைகையாற்றில் வெள்ளம் வந்தது. மாணிக்கவாசகரைத் துன்புறுத்தியோர் ஒடிப்போர்ைகள். மாணிக்கவாசகர் மதுரைக் கோயிலுக்குச் சென்று மீனுட்சி சுத்தரேசுவரரை வணங்கினர். வைகை ஆற்றின் உடைப்பை அடைப்பதற்கு ஊரார் எல்லாருக்கும் பங்கு பிரிக்கப்பட்டது. ஊர் மக்கள் தங்கள் தங்கள் பங்கை அடைக்கத் தொடங்கினர்கள். கடவுள்மீது அன்புடைய வந்தி என்ற பெயர் உடைய கிழவி ஒருத்தி மதுரையில் இருந்தாள்: அவள் பிட்டுச் செய்து விற்று வாழ்பவள். அவளுக்குக் குழந்தையும் இல்லை; அவளேக் காப்பாற்று பவர் ஒருவரும் இல்லை. உடைப்பை அடைக்கும் பணியில் அவளுக்கும் ஒரு பங்கு விடப்பட்டது. அவளுக்கு உதவி செய்பவர் எவரும் இல்லை; ஆகையால் இறைவன் பிட்டு வாணிச்சியின் பங்கை அடைப்பதற்குக் கூலி ஆளாக வந்தார்: அக்கிழவியிடம் பிட்டைக் கலியாகப் பெற்ருர்; அதனை உண்டார்; ஆல்ை உடைப்பை அடைக்காமல் தண்ணிரில் குதிப்பார்: நீந்துவார்; கூடையைத் தலை அஃணயாக வைத்துப் படுப்பார்; விளையாடுவார். இங்கனம் பல விளையாடல்களைப் புரிந்துகொண்டே இருந்தார். இதை அரசன் அறிந்தான்: ‘'வேலை செய்யாமல் வீண் பொழுது போக்குகிமு யா?" என்று சினங்கொண்டான். பிரம்பால் ஓங்கி அடித்தான். அந்த அடி எல்லா உயிர்களின் மேலும் பட்டது. — 15–