பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 அக்கூலி ஆள் ஒரு கூடை மண்ணைக் கொட்டினர்; உடனே மறைந் தார். உடைப்பும் அடைபட்டது. மாணிக்கவாசகரின் பெருமையை அரசன் உணர்ந்தான்; வணங்கின்ை. இறைவன் கூலி ஆளாக வந்ததை மாணிக்கவாசகர் வியந்தார்; அவர் அரசன் கைப்பிரம்பால் அடிபட்டதை நினைந் தார்; வருந்தினர்: "பண் சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்' என்ற திருவம்மானைப் பாடலைப் பாடினர். இறைவன் தம் பொருட்டு எளிய கூலி ஆளாக வந்து அருள் புரிந்ததை வியந்தார்; பலகாலும் நினைந்தார்; 'தந்தது உன் தன்னைக் கொண்டது என்தன்னை' என்ற திருவாசகம் பாடினர். பிறகு அமைச்சர் பதவியில் இருந்து அரசன் மாணிக்கவாசகரை விடுவித்தான். மாணிக்கவாசகர் மறுபடியும் திருப்பெருந் துறைக்குச் சென்ருர்; குருந்த மரத்தடியில் இருந்த எம்பெருமானை வணங்கினர்; 'போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே' என்று திருப்பள்ளியெழுச்சி பாடினர். பிறகு இறைவன் மாணிக்கவாசகரிடம், நீ பல தலங்களுக்கும் சென்று எம்மை வணங்குவாய்; பின்னர்த் தில்லை ஆகிய சிதம் பரத்துக்கு வருவாய்' என்று கூறினர். மாணிக்கவாசகரும் (இராமநாதபுரத்துக்கு அருகில் உள்ள) உத்தரகோச மங்கை என்ற தலத்துக்குச் சென்ருர்; அங்கே, 'கடையவனேனைக் கருணையினுல் கலந்து ஆண்டுகொண்ட விடையவனே என்று தொடங்கிப் பாடினர். அங்கிருந்து சீர்காழிக்கு வந்தார்: "அம்மையே அப்பா - என்று தொடங்கிப் பாடினர். மேலும் இத் தலத்தில், "பால் நினைந்து ஊட்டும் தாயினும்' என்ற திருவாசகம் பாடினர். பின் மாணிக்கவாசகர் திருவண்ணுமலைக்குச் சென்ருர்; அப் பொழுது மார்கழி மாதம், கன்னிப்பெண்கள் விடியற்காலையில் எசிேந்து ஒருவர் மற்ருெருவரை எழுப்பி வீதிவழியே இறைவனைப் பாடிக்கொண்டு செல்லும் காட்சியைக் கண்டார்; 'ஆதியும் அந்தமும் இல்லா' என்று தொடங்கி 'திருவெம்பாவை' என்று புகழப்படும் பாடல்களைப் பாடினர். பிறகு மாணிக்கவாசகர் காஞ்சிபுரம் சென்று சேர்ந்தார்: 9.காம்பரேசுவரரை வணங்கினர்; அங்கிருந்து திருக்கழுக்குன்றம்