பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 இறைவன் எழுதிக் கொண் டார்: மறைந்தார். "இங்ங்ணம் எழுதிக் கொண்டது இறைவனே ஆகும்' என்று மாணிக்கவாசகர் பின்பு அறிந்து கொண்டார். மறுநாட் காலை தில்லைவிாழ் அந்தணர்கள் சிற்சபையில், பஞ்சாக்கரப்படியில் ஒர் ஏட்டுச்சுவடி இருப்பதைக் கண்டார்கள். அதில் “மாணிக்கவாசகன் சொல்ல அழகிய சிற்றம்பலம் உடை யான் கையெழுத்து' என்று எழுதி இருந்தது. எல்லாரும் மகிழ்ந் தார்கள். மாணிக்கவாசகரிடம் சென்று இதனைக் காட்டினர். மாணிக்கவாசகரும் பெருமகிழ்ச்சி அடைந்தார்: "முத்தி நெறி அறியாத' என்று தொடங்கி அச்சோப்பதிகம் பாடினர். தில்லைவாழ் அந்தணர்கள். இப்பாடல்களுக்குப் பொருள் யாது? என்று கேட்டார்கள். மாணிக்கவாசகர், "இப்பாடல்களுக்குப் பொருள் நடராசப் பெருமானே' என்று சுட்டிக்காட்டினர். அவ் வாறு சுட்டிக் காட்டிக் கொண்டே சென்று நடராசப் பெருமானு டைய திருவடிகளில் இரண்டறக் கலந்தார். "ஊழிமலி திருவாதவூார் திருத்தான் போற்றி!' திருச்சிற்றம்பலம்