பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 வில்லை. பற்றற்ற நிலையில் வாழ்ந்து வந்த அவர் பரமனின் வரம் பெற்ற வார்த்தைகளைப் பற்ருது பித்தனைப் போல் சுற்றிச் சுற்றி வந்தார். அருணகிரியின் இத்தகைய போக்கைக் கண்டு உற்ருேரும் உற வினரும் வாய்க்கு வந்தபடி பேசினர், ஏசினர். நாளடைவில் அருணகிரி மனத்திலே பலவிதமான சலனங்கள் ஏற்பட்டன: உள்ளத்திலே எத்தனையோ போராட்டங்கள் தோன்றின. மனம் குழம்பினர். அந்த நிலையில் அவர் முன்பு தாம் செய்த தவற்றை எண்ணி எண்ணி வருந்தத் தொடங்கினர். ஆன்ருேர் சொல் கேளாது அடாத பழிக்கு ஆளானேமே" என்று ஏங்கித் துடித்தார். குன்றுதோறும் குமரப் பெருமானின் கமல மலர்ப்பாதங்களைப் போற்றிப் பாட வேண்டியதற்கு மாருகச் சிங்காரப் பெண்களின் பின் சென்று தீயநெறி கண்டோமே என்று எண்ணி மேலும் மேலும் ஏக்கம் கொண்டார். 'முருகா! மங்காத தவநிலை தந்து என்னை ஆட்கொண்டருளு வாய், பெருமானே' என்று சொல்லிக் கண்ணிர் வடித்துக் கதறிஞர். திருவண்ணுமலைக் கோயிலின் பெரிய கோபுரத்தின் வட வாயிலில் தவநிலையில் அமர்ந்தார். ஆறுதல் தரும் ஆறுமுகப் பெருமானை அகத்தே கோயில் கொள்ளச் செய்தார். ஆறுமுகங்களையும், பன்னிருதோள்களையும், தண்டைச் சிலம் பணிந்த செங்கமலத் தாள்களையும் சிந்தையிலே கொண்டு தியா னத்திலே அமர்ந்தார். தியானத்தின் மகிமையால் அவர் செய்த கர்மவினைகள் பட்டொழிந்து போக, அறவழி அவரை வந் தணைந்தது. அவர் தியானத்தில் மலைபோல் உயர்ந்தார். இவ்வாறு பலகாலம் தவம் இருந்தும் அவரால் பெருமானைத் தரிசிக்க முடியவில்லை. அவர் மனம் வாடினர்; நாதன் தாள் காணுத வாழ்வும் ஒரு வாழ்வா? என்று எண்ணிஞர். 'உயிரை விடுவதே உத்தமம்' என்ற முடிவிற்கே வந்தார். கோபுரத்தின்மீது ஏறினர், அருணகிரிநாதர். 'குமரேசா!' என்று கூவி அழைத்தார். 'கந்தா!' என்று கதறி அழுதார். 'முருகா' என்று மனம் உருகத் தியானித்தார்.