பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 டெ திருச்சிற்றம்பலம் திருஞானசம்பந்த சுவாமிகள் வரலாறும் திருப்பாடல்களும் இந்தியா ஒரு பெரிய நாடு. இதன் தென் பகுதியில் உள்ளது தமிழ்நாடு. இதில் புகழ் பெற்ற ஒரு மாவட்டம் தஞ்சை. இதைப் பழைய காலத்தில் சோழநாடு என்ருர்கள். இச் சோழ நாட்டில் சீர்காழி என்ற தலம் இருக்கிறது. அதில் சிவபாத இருதயர் என்று ஒருவர் இருந்தார். அவர் மனைவியின் பெயர் பகவதியார் என்பது. அவர்களுக்கு ஒர் ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையைச் சீரும் சிறப்புமாக வளர்த்தார்கள். அக் குழந்தைக்கு மூன்று வயது ஆயிற்று. சிவபாத இருதயர் தினந்தோறும் கோயிலுக்குப் போவார்; கோயிலில் உள்ள குளத்தில் குளிப்பார்; தோனியப்பர் என்ற பெயருடைய கடவுளே வணங்குவார். ஒருநாள் அவருடைய குழந்தை அவரைப் பின் தொடர்ந்தது: அவரும் குழந்தையைக் குளக்கரையில் உட்காரச் செய்தார்: குளத்தில் இறங்கினர்: தண்ணிரில் முழுகிக் குளித்தார். அவர் தண்ணிரில் நீண்ட நேரம் முழுகி இருந்தார். அப் பொழுது அக் குழந்தை தன் தந்தையைக் காணுமல் அழத் தொடங்கியது. கோயில் சிகரத்தைப் பார்த்து, அம்மா அப்பா என்று அழுதது. சிவபெருமான் அக் குழந்தையின் முன் வந்தார்; உமாதேவியைப் பார்த்து, 'இக் குழந்தைக்குப் பால்கொடு என்று கூறினர். உமையம்மையாரும் பாலோடு சிவஞானத்தைக் கலந் தார். அதன. அக் குழந்தைக்குக் கொடுத்தார். அக் குழந்தை ஞானப் பாஃபக்குடித்தது. உடனே அதற்குச் சிவஞானம் பிறந்தது. அன்று முதல் அக் குழந்தைக்கு ஞானசம்பந்தர் என்று பெயர் வந்தது.