பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 | மெளனநிலையே பகவானைக் காணச் சிறந்த மார்க்கம் என்பதனை உணர்ந்தார்; சுத்த சிவயோகி போல், சமாதி நிலை பெற்ருர். இவரது இதய கமலத்திலே குன்று அமர்ந்த குமரன் குடி புகுந் தான். அகம் மலர்ந்தது, அருள் சிறந்தது. எங்கும் பிரகாசம் பொங்கியது. ஒருநாள் அகத்திலே பேரொளிப் பிழம்பாக எழுந் தருளிய முருகப்பெருமான் வேலும் மயிலும் விளங்கப் பன்னிரு கண்களும், பவளச் செவ்வாயும், ஈராறு குண்டலங்களும் விளங்கத் தேசோமயமாகப் புறத்தே காட்சி அளித்தார். “அருணகிரி நாதா' என்று அழைத்தார் முருகன்! மாணிக்க வாசகா' என்று பரமன் அன்று அழைத்தாற் போல். அருணகிரி, அருணகிரிநாதர் ஆனர்; சிரமீது கரம் உயர்த்தி, 'முருகா' என்று அழைத்தவாறு அவருடைய திருத்தாள்களைத் தலையால் வணங்கினர். முருகன், அருணகிரிநாதரைத் திருநோக்கம் செய்து, “அருண ரிெநாதா! இம்மையில் எம்மைப் பாடிப் பணிந்து எம்மிடமே வந்தணைவாயாக' என்று திருவாய் மலர்ந்தார். அருணகிரிநாதர் கண்களிலே நீர் பெருக, "ஐயனே வேதங் களுக்கும் எட்டாத உமது திருவடித்தாமரைகளைப் புகழ்ந்து பாடு வதற்கு இவ் வெளியேனுக்கு எப்படி முடியும்?' என்று உள்ளம் உருக வேண்டி நின்ருர். குமரன் கொவ் வைச் செவ்வாயிலே குமிண் சிரிப்பு மலரத் தமது திருக்கைவேலால் அருணகிரியாரின் நாவில், 'ஓம்' என்னும் பிரணவ மந்திரத்தை எழுதினர்; மெய்ஞ்ஞான உபதேசம் செய்து அருளினர். 'முத்து என்று தொடங்கிப் பாடுவாயாக' என்று அடி எடுத்துக் கொடுத்து அருளிச் செய்து பெருமான் மறைந்தார் . 'முத்து' என்று தொடங்கி அருளுசல நாதரைத் தலையால் ஏற்று, முக்கண்ணன் மைந்தனை, மால் மருகனைப் பாடத் தொடங்கினர். 'முத்தைத்தரு பத்தித்திரு நகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக்குருபர-எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரு முப்பத்துமு வர்க்கத் தமரரு-மடியேண ' -20