பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 கந்தப் பெருமானே. இச் செந்தமிழ்ச் சந்தப்பாவால், செந்நாக் குளிரப் பாடிப் பாடிப் பரவசமுற்ருர், ஆனந்தக் கூத்தாடிக் களித்தார். அருணகிரிநாதர், சிவப்பேற்றைப் பெற்ற பரமஞானியானுர்; எம்பெருமானின் திருவடி தீகையால் யோசானு பூதியும், மோன நிலையும் கண்டார். அருணகிரிநாதரின் புகழ் நாடு நகரமெங்கும் பரவியது. மக்கள் அவரைக் கொண்டாடிப் போற்றினர். முருகன் அருளைப் பரி பூரணமாகப் பெற்றவர் என்பதனை நன்கு உணர்ந்த மக்கள், அவரையே முருகளுக எண்ணி வணங்கினர். அருணகிரிநாதரின் புகழ், அப் பிரதேசத்தை ஆண்ட மன்னன் பிரபுடதேவன் செவிகளுக்கும் எட்டியது. மன்னன் அருணகிரி நாதரை நேரில் கண்டு மகிழ்ந்தான். முடி அணிந்த மன்னன் அருணகிரிநாதரை அடிபணிந்து வீழ்ந்து வணங்கினன் அருணகிரி யாரின் அருட்பாக்களேக் கேட்டு அக மகிழ்ந்தான் நாளடைவில் மன்னன் அருணகிரிநாதரின் அன்புத் தொண்டன் ஆன்ை. மன்னனுக்கு, முருகப்பெருமானேக் கண்டு தரிசிக்க வேண்டும் என்ற பக்திப் பெருக்கு உள்ளத்திலே பொங்கிப் பெருகியது. ஒரு நாள் மன்னன் அருணகிரி நாதரை வணங்கித் தவச் செம் மலே! தேவரீர் கண்டு களித்துப் பெருமிதம் பூண்டு வரும் செவ்வேட் பரமனே இந்த அடியேனும் தரிசித்துப் பேறுபெறும் பாக்கியத்தைத் தந்தருள வேண்டும்' என்று வேண்டிக் கொண்டான். மன்னனின் இந்த அவாப் பூர்த்தியாகும் தருணம் வந்தது! அவ்வூரில், சம்பந்தாண்டான் என்னும் பெயருடைய தேவி பக்தன் ஒருவன இருந்தான். இவனும் அரசனுக்கு நண்பனுக இருந்தான். அருணகிரிநாதருக்கும் மன்னனுக்கும் இடையே ஏற்பட்ட அன்பைப் பற்றிக் கேள்வியுற்ற சம்பந்தாண்டான் உள்ளத்தில் பொருமைத்தி கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. அவன் அவர்களின் நட்பைப் பிரிக்கத் திட்டமிட்டான். சம்பந்தாண்டான் அரசனை அணுகி, ‘அரசே! யாரொருவர் தாம் வழிபடும் மூர்த்தியை நேரில் தோன்றச் செய்கின்ருரோ