பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

333 அவர்தாம் உண்மையான பக்தர். அவர்மீது தான், தாங்கள் அன்பு செலுத்த வேண்டும்' என்ருன். சம்பந்தாண்டான் வாதம் மன்னனுக்கு அவன்மீது வெறுப் பையும், ஆத்திரத்தையம் அதிகப்படுத்தியது. சம்பந்தாண்டான் மன்னனிடம் அடிக்கடி இதையே சொல்வி s 睡 -ா. #. ול ת - + H - - H. வந்தான். மன்னன் நிலை தர்மசங்கடமானது. இவனது கூற்றை அருணகிரிநாதருக்கு எவ்வாறு உணர்த் துவது என்பதனை அறியாது மன்னன் மனம் குழம்பினு:ன். அப்பொழுது மன்னனுக்கு ஒன்று தோன்றியது. அருணகிரி நாதரின் பெருமையை உலகறியச் செய்ய இது ஒரு நல்ல சந்தர்ப்ப மாக அமையும் என்று கருத்திலே கொண்டான். சம்பந்தாண்டான் கூற்றை அருணகிரி நாதரிடம் கூறினன், மன்னன்! 'குமரப்பெருமான் திருவருட்கருணை அதுவாயின் அவ்வாறே நடக்கட்டும்' என்று தமது சம்மதத்தைத் தெரிவித் தார், அருணகிரிநாதர். அரசன் அவை கூட்டினன். இவர்கள் வாதத்தைக் காண அன்பர்களும், அடியார்களும் அவையில் கூடினர். சம்பந்தாண்டான் அகங்காரமே உருவமாக ஒருபுறம் அமர்ந் திருந்தான். அருணகிரிநாதர் திருவெண்ணிறும், உருத்திராக மாலைகளும் விளங்கச் சிவப்பொலிவுடன் பேரொளி பொங்க எழுந்தருளியிருந் தார். முதலில், சம்பந்தாண்டான் தேவிமீது மந்திரங்களே உரு வேற்றிப் பராசக்தி! நான் ஒரு உண்மையான தேவி உபாசகன் ஆனல், இக்கணமே சூலமும் மழுவும் தாங்கிச் சிங்கவாகனருபிணி யாக அவை நடுவே வந்து தோன்றுவாயாக!' என்று வேண்டினன். சக்தியையே வேலாகக் கொண்ட முருகனின் அருள்பெற்ற அருணகிரிநாதரின் அழைப்புக்காகக் காத்திருக்கும் ஆண்டவன் சம்பந்தாண்டானின் ஆணவ வார்த்தைகளுக்குத் திருவு ள்ளம் கொள்ளவில்லை! சம்பந்தாண்டான் அவை நடுவே தோல்வியைத் தழுவிக் கூனிக் குறுகிப் போனன்.