பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

337 பொழிந்தார்! அறுபடைக் குமரனும் அவருக்கு அ() ன்ப * . பொழிந்தார். - அருணகிரிநாதரின் பெருமையை முருகப்பெருமான் ஒவ்வெ: தலத்திலும் ஓங்கி உயரச் செய்து அருளினர். יז היריו טיס பாரதம் பாடிய வில்லிபுத்துார் ஆழ்வாருக்கும், '. அருணகிரிநாதருக்கும் வாது செய்யும் சந்தர்ப்பம் ஏற்பட்டப் வில்லிபுத்தூரார் தம்மோடு வாது செய்து தோற்பவர்களின் காதை அறுப்பதைப் பெரும் நிபந்தனையாகக் கொண்டிருந்தார். ஆனல் வில்லிபுத்துாரார் அருணகிரி சுவாமிகள் பாடிய செய்யுளுக்குப் பொருள் சொல்ல முடியாமல் தோல்வியுற்ருர். போட்டி நிபந்தனையின்படி வில்லிபுத்துாரார் காதை அறுத்துக் கொள்ள வேண்டும் என்று அவை தீர்ப்பளித்த போதும், அருணகிரி நாதர், கருணைக்கு விரோதமாகக் கொள்ளுதல் கூடாது' என்று அவருக்குப் புத்திமதி சொன்னர்; அத்தோடு அவர் கையில் வைத் திருந்த குறடாவையும் வீசி எறியச் செய்தார் சுவாமிகள். அது சமயம் சுவாமிகள் பாடிய நூல்தான் கந்தர் அந்தாதி என்பது. இவ்வாறு அருணகிரிநாதரின் கருணையும் பக்தியும் கவிபாடும் திறனும் நாளுக்கு நாள் நாடெங்கும் பரவின. ஒருவாறு சுவாமிகள் தமது தீர்த்தயாத்திரையை முடித்துக் கொண்டு திருவண்ணுமலை வந்து சேர்ந்தார். மன்னன் பிரபுடதேவன் அருணகிரிநாதரை அணி தேர்புரவி ஆட்பெரும் படை கொண்டு எதிர்கொண்டு அழைத்தான். பக்திக்குக் கட்டுப்பட்ட மன்னன் அவரிடம் தம்மையே அர்ப் பணித்தான். அருணகிரிநாதரிடம் தீராப் பகை கொண்டிருந்த சம்பந் தாண்டான், அவரை மீண்டும் பழிவாங்க எண்ணினன். அதற்காக அவன் ஒரு சூழ்ச்சி செய்தான். சம்பந்தாண்டான் அரசனை அணுகி, ‘அரசே உமது நண்பர் அருணகிரி பெரும் வல்லமை பொருந்தியவர். அஷ்டமாசித்தி களையும் பெற்றவர் என்றெல்லாம் போற்றிப் புகழ்கிறீர்களே: அத்தகைய தகுதி அவருக்கு உண்டென்பதை உலகம் ஏற்க வேண்டுமென்ருல் கற்பக நாட்டிலிருந்து பாரிஜாத மலரைக் கொண்டுவரச் செய்யுங்கள் பார்க்கலாம்' என்று வஞ்சினம் கூறினன்.