பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 சம்பந்தாண்டானின் செருக்கை வேரோடு அறுக்க முடிவு பூண்ட மன்னன் அவன் சொன்னவற்றை அருணகிரிநாதரிடம் மன்னனின் மொழிகேட்டு அருணகிரிநாதர், "எமது ஐயனின் திருவுள்ளம் அதுவாயின் யாம் இப்பொழுதே சென்று பாரிஜாத மலரைக் கொண்டு வருவோம்’ ’ என்று கூறினர். அருணகிரிநாதர் கோபுரத்தே சென்று அமர்ந்தார்; தியா னத்தை மேற்கொண்டார்; அப்பொழுது அங்கே இறந்து கிடக்கும் கிளி ஒன்றைக் கண்டார். அருணகிரிநாதர் அஷ்டமாசித்திகளின் சக்தியால் தம் உடலைக் கோபுரத்தில் இருக்கச் செய்து உயிரைக் கிளியின் உடலுள் பிரவேசிக்கச் செய்தார். கிளி உருவம் பூண்ட அடியார் கற்பக நாட்டிற்குப் பறந்து சென்ருர். இவற்றை அறிந்த சம்பந்தாண்டான், இதுவே அருணகிரியை அழிக்கத் தருணம் என்று கருத்திலே கொண்டான்: அக்கணமே மன்னனிடம் சென்று அருணகிரி ஆலயத்தின் கோபுரத்தில் இறந்து கிடக்கிருன்’ என்று சொன்னன். அவனது பொய்யுரை கேட்டு வேந்தன் வெந்தணலில் விழுந் தாற்போல் துடித்தான்; கண்ணிர் வடித்துக் கதறினன்; உண்மையை உணர்ந்து பார்க்கச் சக்தியற்ற அரசன் அருணகிரி நாதரின் உடலைத் தகிப்பித்தான். அரசன் மனவேதனையோடு அரண்மனையிலே அருணகிரி நாதரின் நினைவோடு இருந்து வந்தான். அப்பொழுது அருணகிரிநாதர் கிளி ரூபத்தில் பாரிஜாத மலருடன் கோபுரத்திற்கு வந்தார்: கோபுரத்தில் தமது உடலைக் காணுமல் திகைத்தார்; ஞான திருஷ்டியால் நடந்தவற்றை அறிந் தார்; கிளி உருவத்தில் மன்னனிடம் சென்ருர், பாரிஜாத மலரைக் கொடுத்தார். மன்னன் தான் செய்த பிழையை நினைத்துப் புழுவாய்த் துடித்தான்: கிளியின் கால்களில் வீழ்ந்து கதறிப்புரண்டு அழுதான்.