பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 “அருணகிரிநாதா! அன்று நீ எம்மிடம் சுகபதம் வேண்டும் என்று கேட்டாய் அல்லவா? அதற்காகவே உனக்கு யாம் இந்த உருவைக் கொடுத்தோம். நீ பேரின்பத்தை விரும்பித் திருத்தணி யிலே எம்மைப் பாடிப் பரவசமுற்ருய் அல்லவா? ஆதலால் நீ தணிகைக்கு வந்து எம்மை உனது பண் தமிழால் பணிந்து எம்முடன் சேர்வாயாக! அது போலவே நீ கிளி ரூபத்தில் எமது தாயின் திருக்கரத்திலும் அமர்ந்து களிப்புறுவாயாக’ என்று திருவாய் மலர்ந்தார் முருகப் பெருமான். அருணகிரிநாதர் ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் முருகனின் திருவடியிவே அமர்ந்து பிறவாப் பெருவாழ்வு பெற்ருர், சம்பந்தாண்டான் தானகவே தனது அழிவைத் தேடிக் கொண்டான். மன்னன் பிரபுடதேவன் அருணகிரியின் சிடன் ஆளுன் அருணகிரிநாதரின் நினைவாகப் பதினறுகால் மண்டபம் கட்டின்ை. அருணகிரிநாதர் இன்றும் நம்முடனேயே வாழ்ந்து கொண் டிருக்கிருர். அவர் அருளிய கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம், வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழு கூற்றிருக்கை, திருவகுப்பு ஆகியவை இன்னும் நம்மிடையே வேத சொரூப மந்திரங்களாக இருந்து வருகின்றன. அருணகிரிநாதர், நம் செந்தமிழ் நாட்டில் பெருங்கடவுளாம் முருகனின் அடியார்களுள் தலைசிறந்த ஒருவராக விளங்குகிருர்; ஒப்புயர்வற்ற சிறந்த அருட்பெருங்கவிஞராக வாழ்ந்துகொண்டே இருக்கிருர், முருகப்பெருமானுடைய திருவருளால் இந்த உலகத்தில் வாழும் பொழுதே பேரானந்தப் பெருவாழ்வு பெற்றவர், ஜீவன் முக்தராக விளங்கியவர், அருணகிரிநாத சுவாமிகள். அவர் பாடிய திருப்புகழ் இன்று தமிழ் முழங்கும் இடமெல்லாம் பரவி, மக்கள் உள்ளத்தை உருக்கி இன்பம் அளிக்கிறது.