பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நீரில் மூழ்கியிருந்த தந்தை வெளியே வந்தார்; குழந்தையின் வாயில் இருந்து பால் வழிவதைப் பார்த்தார்: "உனக்குப் பால் கொடுத்தது யார்?' என்று கோபத்துடன் கேட்டார். அக் குழந்தை சிவஞானம் பெற்றது; ஆகையால் தனக்குப் பால் கொடுத்தது சிவபெருமானும் உமாதேவியுமே என்பது அக் குழந் தைக்குத் தெரியும். அதனையே "தோடு உடைய செவியன்' என்று தொடங்கிப் பதிகம் பாடிக் கூறினர். தந்தை சிவபாத இருதயர் மகிழ்ச்சியடைந்தார். சிவபெரு மானே இக் குழந்தைக்கு ஞானப் பால் கொடுத்த அதிசயம் ஊர் முழுவதும் பரவியது. எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். தந்தை சிவபாத இருதயரும் குழந்தை ஞான சம்பந்தரும் கோயிலுக்குப் போனர்கள்; தோணியப்பரை வணங்கினர்கள்: வீட்டுக்குத் திரும்பினர்கள். சீர்காழிக்கு அருகில் திருக்கோலக்கா என்று ஒரு தலம் இருக் கிறது. அங்கே போக வேண்டும் என்று சம்பந்தர் விரும்பினர். சிவபாத இருதயரும் ஞானக் குழந்தையைத் தம் தோள் மேல் துரக்கிச் சென்ருர், கோயிலில் சம்பந்தர் 'மடையில் வா8ள' என்று தொடங்கிப் பதிகம் பாடினுர், பாடும் பொழுது கைகளால் தாளம் போட்டார். அப்பொழுது சிவபெருமானின் திருவருளால் இரண்டு பொன் தாளங்கள் அவர் கைக்கு வந்தன. அத் தாளங்களின் மேல் சிவாயநம என்று எழுதி இருந்தது. அன்று முதல் சம்பந்தர் பொன் தாளங்களைக் கொண்டு தாளம் போட்டுப் பாடலானர். சம்பந்தரின் தாயார் பிறந்த ஊர் திருநனிப்பள்ளி என்பது ஆகும். தம் தகப்பனர் தூக்கிச் செல்லச் சம்பந்தர் அவ்வூருக்குச் சென்ருர்: பதிகம் பாடித் திரும்பினர். சிதம்பரத்துக்கு அருகில் திரு எருக்கத்தம்புலியூர் என்ற தலம் இருக்கிறது. அவ்வூரில் திருநீலகண்டர் என்று ஒருவர் இருந்தார். அவர் யாழ் மீட்டுவதில் சிறந்தவர். அவர் மனைவியின் பெயர் மதங்க சூளாமணி என்பது. இவ் விருவரும் சீர்காழிக்கு வந்தார்கள்: சம்பந்தரை வணங்கினர்கள். சம்பந்தருடைய இசைவு பெற்றுத் திருநீலகண்ட யாழ்ப்பாணர், சம்பந்தர் பாடும்பொழுது யாழ் வாசித்து வரலார்ை.