பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி nirththappadham vaiththap payiravi திக்கு ஒக்க நடிக்கக் கழுகொடு கழுதாடத் thikku okka nadikkak kazhugodu kazhudhaadath திக்குப்பரி அட்டப் பயிரவர் thikkuppari attap payiravar தொக்குத் தொகு தொக்குத் தொகு தொகு thokkuth thogu thokkuth thogu thogu சித்ரப் பவுரிக்கு த்ரிகடக என வோதக் sithrap pavurikku thrikadaga ena võ dhak கொத்தப் பறை கொட்டக் களமிசை koththap parrai kottak kallamisai குக்குக் குகு குக்குக் குகுகுகு kukkuk kugu kukkuk kugukugu குத்திப் புதை புக்குப் பிடியென முதுகடகை kuththip pudhai pukkup pidiyena mudhukugai கொட்புற்றெழ நட்பற் றவுணரை kotputrezha natpatr rravunnarai வெட்டிப்பலி இட்டுக் குலகிரி vettippali ittuk kulagiri குத்துப்பட ஒத்துப் பொரவல் பெருமாளே! kuththuppada oththup poravala perumaallē I முத்தைப் போன்ற வரிசையான பற்களையுடைய தேவயானைக் குக் கணவன்-வலிமை உடையவன்-சரவணப் பொய்கையில் வளர்க்கப்பட்டவன்-முத்திக்கு வித்து ஆனவன்-குருபரன் என்று (புகழ்ந்து) சொல்லுங்கள்! மூன்று கண்களை உடைய சிவபெருமானுக்கு வேதம் ஒதுவ தற்கு முன் சொல்வதாகிய 'ஓம்' எனும் மந்திரத்தின் பொருளைக் கூறினவன் நீ-பிரமனும் திருமாலும் ஆகிய இருவரும், முப்பத்து மூவர் கடவுளர்களும், அந்த இனத்தைச் சேர்ந்த தேவர்களும் உன் திருவடிகளை வணங்குகிரு.ர்கள்! இராவணனுடைய பத்துத் தலைகளும் விழுமாறு அம்புகளைத் தொடுத்தவன்-மந்தரம் என்னும் மலையை மத்தாகக் கொண்டு கடைந்தவன்-பட்டப்பகலில் வட்டமான சக்கரத்தால் (சூரியனை மறைத்து) இரவு ஆக்கியவன்-பக்தன் ஆகிய அருச்சுனனுக்கு