பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 சந்ததம் SANDHADHAM மக்கள் ஆனவர் மனைவி குழந்தை சுற்றம் என்ற பிணிப்பால் மனம் கலங்கி இருக்கிரு.ர்கள். அவர்கள் இறைவன் இடத்தில் அன்பு காட்ட வேண்டும்: அந்த இறைவனைத் தினந்தோறும் வணங்க வேண்டும்; அவன் பெயரை விடாமல் சொல்ல வேண்டும்; -இப்படி நடந்தால் மனக்கலக்கம் நீங்கும்! முருகன் அன்பு வேண்டும் சந்ததம் பந்தத் தொடராலே Sandhadham bhandhath thodaraalē சஞ்சலம் துஞ்சித் திரியாதே sanjalam thunjith thitiyaadhe கந்தன் என்று என்று(ம்) உற்று உனே நாளும் Kandhan endru endrum utru una i na a llum கண்டு கொண்டு அன்புற்றிடுவேனே? kanndu kon ndu an butriduwén o? தந்தியின் கொம்பைப் புணர்வோனே ! Thandhiyin kombaip punnarvö në ! சங்கரன் பங்கில் சிவைபாலா ! Sankaran panggil Siva ibhaala a l செந்தில் அங் கண்டிக் கதிர்வேலா ! Sendhil ang Kan ndik Kadhir vēlaa ! தென் பரங்குன்றில் பெருமாளே ! then Paranggun dril perumaallē ! எக்காலமும் (மனேவி மக்கள் ஆகிய) பந்தத்தின் தொடர் பாலே துன்பம் அடைந்து (திரிகிருேம்); அங்ஙனம் திரியாமல் 'கந்தன்' என்று எப்பொழுதும் உன்னை அடையவேண்டும். உன்னை நாள்தோறும் பார்த்துக் கொண்டு அன்பு பொருந்தி இருக்க வேண்டும்- இப்படி இருப்பேனே? தேவயானையோடு பொருந்தி இருப்பவனே! சிவபெருமானின் ஒரு பாகத்தில் உள்ள உமையின் மகனே!