பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 அங்கிருந்து திருவாவடுதுறை என்னும் தலத்துக்குச் சம்பந்தர் வந்தார். அப்பொழுது சம்பந்தருடைய தந்தை சிவபாத இருதயர் வேள்வி செய்ய வேண்டும் என்று விரும்பினர்; அதற்காகப் பணம் வேண்டும் என்று சம்பந்தரைக் கேட்டார். சம்பந்தர் திருக்கோயி லுக்குச் சென்ருர். இடரினும் தளரினும்' என்று தொடங்கும் பதிகம் பாடினர். அப்பொழுது ஆயிரம் பொன் கொண்ட பொற்கிழி சம்பந்தருக்குக் கிடைத்தது. அதனைச் சம்பந்தர் தம் தந்தையிடம் கொடுத்தார். பிறகு காரைக்காலுக்கு அருகில் உள்ள திருத்தருமவாம் எனும் தலத்துக்குச் சென்ருர்: “மாதர் மடப்பிடியும்' என்ற பதிகம் பாடினர். வழக்கம்போல் யாழ்ப்பாணர் யாழில் இசைத்தார்: முடியவில்லை: இசைக்க முடியாமல் போகவே யாழ்ப்பாணர் தம் யாழை உடைக்கப் போளுர்; சம்பந்தர் தடுத்தார். பிறகு பானர் தம்மால் முடிந்த அளவு யாழில் இசைத்தார். அங்கிருந்து திருச்செங்காட்டங்குடி என்ற தலத்துக்குப் போனர். அங்கே ஒரு சிறந்த சிவனடியார் இருந்தார். அவர் பெயர் சிறுத்தொண்டர் : சிறுத்தொண்டர் சம்பந்தரை வரவேற்ருர், இவ்வூருக்கு அருகில் உள்ள தலம் திருச்சாத்த மங்கை. அங் கேயும் ஒரு சிறந்த நாயனர் இருந்தார். அவர் பெயர் நீல நக்கர்: அவரும் சம்பந்தரை வரவேற்ருர். பிறகு திருமருகல் என்ற தலத்துக்குச் சென்ருர். அங்கே கோயிலில் அழுகை ஒலி கேட்டது; என்ன? என்று விசாரித்தார். ஒரு வணிகன்-அவனுடைய மாமன் மகள் கன்னிப்பெண்அவளுடன் அவ் வணிகன் மதுரைக்குப் போகிறவன் அவ்வூருக்கு வந்தான்-கோயிலில் அவனைப் பாம்பு கடித்தது-அவன் இறந் தான்-அதனல் அப் பெண் அழுது கொண்டிருக்கிருள்' என்று சம்பந்தரிடம் கூறினர்கள். சம்பந்தர் மனம் இரங்கினர்: "சடை யாய் எனுமால்' என்று தொடங்கும் பதிகம் பாடினர். இறந்த வணிகனும் பிழைத்து எழுந்தான் வணிகனுக்கும் கன்னிப்பெண் ணுக்கும் திருமணம் நடத்தி வைத்தார். பிறகு சம்பந்தர் திருக்கட வுர் என்ற தலத்துக்கு வந்தார். அங்கு வாழ்ந்த நாயனர் பெயர் குங்கு லியக்கலயர் என்பது ஆகும். அந்த நாயனர் சம்பந்தரை வரவேற்ருர்.