பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 அங்கிருந்து சம்பந்தர் திருவிழி மழலை என்ற தலத்துக்குச் சென்ருர், திருநாவுக்கரசரும் உடன் வந்தார். அந் நாளில் அங்கே மழை பெய்யவில்லை; கடுமையான பஞ்சம்; மக்கள் பசியால் வாடி ர்ைகள். இதை அறிந்த சம்பந்தரும் திருநாவுக்கரசரும் கடவுளை வேண்டினர். சிவபெருமான் அருளால் அவர்கள் ஒவ்வொரு வருக்கும் நாள்தோறும் ஒவ்வொரு பொற்காசு கிடைத்தது. அப் பொற்காசைக் கொண்டு அவ்விருவரும் அடியார்களுக்கு உணவு அளித்தார்கள். பஞ்சமும் நீங்கியது. இருவரும் திருமறைக்காடு என்ற தலத்துக்குச் சென்ருர்கள். அவ்வூர்க் கோயிலில் முன் ஒரு சமயம் வேதங்கள் வந்து பூசை செய்தன: கோயில் கதவுகளை மூடிவிட்டுச் சென்றன. அது முதல் கோயிலுக்குள் போக வேறு வழியை உண்டாக்கிக் கொண்டார்கள்; அந்த வழியாகக் கோயிலுக்குள் போவது வழக்கம் ஆயிற்று. இச் செய்தியைச் சம்பந்தர் அறிந்தார்: திருநாவுக்கரசரைப் பார்த்தார். 'கதவுகள் திறக்கும் வண்ணம் பாடுங்கள் என்ருர், அவரும் ஒரு பதிகம் பாடினர். கதவுகள் தாமாகவே திறந்து கொண்டன. எல்லோரும் கோயிலுக்குள் சென்று கடவுளை வணங்கினர்கள். திரும்பும் பொழுது சம்பந்தர் சதுரம் மறைதான் என்ற பதிகம் பாடினர்; கதவுகள் மூடிக் கொண்டன. அந்த வழியாகவே பிறகு கோயிலுக்குள் போக முடிந்தது. அவ்விருவரும் சில காலம் அவ் ஆரிலேயே தங்கி இருந்தார்கள். அந்நாளில் மதுரையில் அரசனாக இருந்தவன் மாறவர்மன் என்ற பெயர் உடையவன் ஆவன். அவனுக்குக் கூன் பாண்டியன் என்றும் பெயர் உண்டு. அவன் மனைவியின் பெயர் மங்கையர்க்க .ை அவன் அமைச்சனின் பெயர் குலச் சிறையார். இப் பாண்டிய அரசன் காலத்தில் பாண்டிய நாட்டில் எண்ணு யிரம் சமண முனிவர்கள் இருந்தனர். அந்நாட்டு மக்கள் யாவரும் சமண சமயத்தைத் தழுவினர்கள். அரசன் ஆகிய கூன்.பாண்டி யனும் சமண சமயத்தை ஆதரித்தான். ஆனல் மங்கையர்க்கரசி யாரும், மந்திரி குலச்சிறையாரும் சைவ சமயத்தைத் தழுவியிருந் தார்கள். இவ் விருவரும் சம்பந்தருடைய பெருமைகளைக் கேள்விக் பட்டார்கள்: சம்பந்தரை மதுரைக்கு வருமாறு அழைப்பு அனுப் பினர்கள். சம்பந்தர் மதுரைக்குச் செல்லப் புறப்பட்டார். உடன் இருந்த திருநாவுக்கரசர்,'இப்பொழுது நாளும் கோளும் சரியில்லை என்று