பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 வனச மாமியார் ஆட நெடிய மாமனர் ஆட vanasa maamiyaar aada nediya maama naar aada மயிலும் ஆடி நீ ஆட வர வேனும் mayilum aadi nee aadi vara vēnnum கதை விடாத தோள் வீமன் எதிர்கொள் வாளியால் நீடு kadhai vidaadha tholl veeman ehir koll vaalliyaal needu கருதலார்கள் மாசேனை பொடியாகக் karudhalargall maasēnai podiyaagak கதறு காலி போய் மீள விசயன் ஏறு தேர் மீது kadharu kaali poy meella Visayan ērru thēr meedhu கனக வேத கோடு ஊதி அலே மோதும் kanaga vēdha kodu ūdhi alai mödhum உததி மீதிலே சாயும் உலகம் ஊடு சீர் பாத udhadhi meedhilë saayum ulagamuduseer paadha உவன ஊர்தி மாமாயன் மருகோனே ! uvanna ūrdhi Maa maayan marugone ! உதய தாம மார்பான ப்ரபுட தேவ மாராசன் udhaya dhaama maarbaana Prapuda dhēva maaraasan உளமும் ஆட வாழ்தேவர் பெருமாளே ! ullamum aada vaazhdhēvar Perumaallē ! அதல உலகத்தில் ஆதிசேடன் ஆட, பெரிய மேருமலை ஆட, இறைவன் இடத்தில் இருந்து பிரியாத காளி ஆட. அவளோடு அண்டங்கள் அதிரும்படி (கைகளை) வீசி ஆடிவரும் எருதின் மேல் ஏறி வருபவரும் ஆகிய சிவபெருமான் ஆட, அருகில் உள்ள பூதங்களும், பிசாசுகளும் ஆட, இனிமையான கலைமகள் ஆட, தாமரை மலரில் இருக்கும் பிரமன் ஆட. வானத்தில் இருக்கும் தேவர்கள் ஆட, சந்திரனும் ஆட, மலரில் வீற்றிருக்கும் மாமியார் ஆகிய இலக்குமி ஆட, ஓங்கி வளர்ந்த மாமனர் ஆகிய திருமால் ஆட, உன் மயிலும் ஆட, நீ ஆடிக்கொண்டு வருவாயாக!