பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 புனல் வாதம் தொடங்கியது. சமணர்கள் 'அத்தி நாத்தி' என்று எழுதி, ஏட்டை வைகை ஆற்றில் இட்டார்கள்; அந்த ஏடு வெள்ளத்தில் அடித்துச் சென்றது. சம்பந்தர் "வாழ்க அந்த னர் வானவர் ஆன் இனம்' என்ற பாசுரத்தை ஒர் ஏட்டில் எழுதினர்; எல்லோரும் காண ஆற்றில் இட்டார். இந்த ஏடு ஆற்றில் எதிர்த்துச் சென்றது. குலச்சிறையார் அதனை எடுக்கக் குதிரைமேல் சென்ருர். திரு எடகம் என்ற தலத் தில் ஏடு நின்றது: அதனைக் கொண்டு வந்தார் குலச்சிறையார். அந்த ஏட்டில் வேந்த னும் ஓங்குக' என்று எழுதப்பட்டு இருந்தது. அதல்ை அரசனது கூனும் தானே நிமிர்ந்தது. அன்று முதல் பாண்டிய அரசனும் நெடுமாறன் என்று பெயர் பெற்ருன். பாண்டியன் சைவ சமயத்தைத் தழுவினன். சமணர்களும் கழு ஏறினர். பாண்டிய நாட்டு மக்கள் யாவரும் சைவ சமயத்தை மேற்கொண்டார்கள். சம்பந்தர் பாண்டிய நாட்டுத் தலங்களைத் தரிசித்தார்; பின் திருக்கொள்ளம் பூ துார் என்ற தலத்துக்கு வந்தார். அங்கு ஆற்றில் வெள்ளம் பெருகி ஓடியது. ஆற்றைக் கடக்க ஒடங்களை விடுவதற்கு ஒடக்காரர்கள் பயந்தார்கள். சம்பந்தர் ஒடத்தில் ஏறினர்; “கொட்டமே கமழும்' என்ற பதிகம் பாடினர். ஒடம் தானகவே வெள்ளத்தில் சென்றது; அடுத்த கரையைச் சேர்ந்தது. சம்பந்தரும் இறைவனே வணங்கிர்ை. பிறகு சம்பந்தம் போதிமங்கை என்ற அளர் வழியாகச் சென்று கொண்டு இருந்தார். அவ்வூரில் புத்த நந்தி என்று ஒருவன் இருந் தான். அவன் ம்பந்தரைத் தடுத்தான். சம்பந்தரின் பாடல் களே திகளில் எழுதிவந்த அன்பர் கோபம் கொண்டார்; சம்பந்தர் முன் ஒரு சமயம் பாடியிருந்த 'புத்தர் சமண் கடிக்கையர்' என்ற தேவ ரத்தைப் பாடினு ர், 'புத்த நந்தியின் தலையில் இடி விழட்டும்' என்று கூறினர். இடி விழுந்து புத்த நந்தி இறத்தான். அங்கிருந்து திருப்பூந்துருந்தி என்ற தலத்துக்குச் சம்பந்தர் சென்ருர். அவ்வூரில் திருநாவுக்காசர் இருந்தார்; சம்பந்தர்