பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வருவதைக் கேள்விப்பட்டார்: எதிர் கொண்டு அழைக்கச் சென்ருர், சம்பந்தர் ஏறிவந்த முத்துச் சிவிகையை யாருக்கும் தெரியாமல் தாங்கி வந்தார். ஊரை அடைந்ததும் சம்பந்தர் 'திருநாவுக்கரசர் எங்கே’’ என்று கேட்டார். திருநாவுக்கரசரும் "உங்களுடைய சிவிகையைத் தாங்கி வருகிறேன்' என்று கூறினர். இருவரும் வணங்கிக் கொண்டார்கள். பின்னர், திருஒத் துார் என்ற தலத்துக்குச் சம்பந்தர் சென்ருர், அந்த ஊரில் பனைமரங்கள் காய்க்கவில்லை; ஆண் பனைகள் ஆகவே இருந்தன. இதனைச் சம்பந்தரிடம் கூறினர். சம்பந்தர் 'பூத் தேர்ந்தாயன" என்ற பதிகம் பாடினர்; எல்லாப் பனைகளும் பெண் பனைகளாக மாறின; காய்க்கத் தொடங்கின. பிறகு (சென்னைக்கு அருகில் உள்ள) திருவொற்றியூர் என்ற தலத்தை அடைந்தார். அந்நாளில் மயிலாப்பூரில் சிவநேசர் என்ற ஒர் அன்பர் இருந் தார். அவருக்கு ஒரு மகள் இருந்தாள். அவளுக்குப் பூம்பாவை என்று பெயர். சிவநேசர் சம்பந்தருடைய பெருமைகளைக் கேள்விப்பட்டார்; தம் ஒரே மகளை அவருக்கு மணம் செய்விக்க நினைத்தார். ஆனால், பூம்பாவை பாம்பு கடித்து இறந்தாள். அப் பிணத்தைச் சுட்டு எலும்பையும் சாம்பலையும் ஒரு குடத்தில் வைத்துக் காத்தார். சில ஆண்டுகள் கழிந்தன. சம்பந்தர் திருவொற்றியூருக்கு வந்ததைச் சிவநேசர் அறிந் தார்; திருவொற்றியூருக்குச் சென்ருர். தம் மகளின் கதையைக் கூறினர்: மயிலாப்பூருக்கு வர வேண்டும் என்று அழைத்தார். சம்பந்தரும் மயிலாப்பூருக்குச் சென்ருர். பூம்பாவையின் எலும்பும் சாம்பலும் உள்ள குடத்தைச் சம்பந்தருக்கு முன்னே வைத்தார்கள். சம்பந்தரும் 'மட்டிட்ட புன்னே' என்று தொடங்கிப் பதிகம் பாடிஞர். பூம்பாவையும் வளர்ச்சியான உருவத்தைப் பெற்றுக் குடத்தை உடைத்துக் கொண்டு வெளியே வந்தாள். இதைப் பார்த்து எல்லோரும் அதிசயம் அடைந் தார்கள். பல தலங்களையும் தரிசனம் செய்துகொண்டு சம்பந்தர் ர்ேகாழிக்குத் திரும்பினர். அப்பொழுது திருமணம் செய்து கொள்ளுங்கள்’ என்று சம்பந்தரை உறவினர் பலரும் வேண்டிக் கொண்டார்கள்.