பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

405 வள்ளலார் வரலாறு 'அருளால் எல்லாம் காணும் கண் நான் தெருளால் சமயம் கடந்து இது பெற்றுள்ளேன்' என நமக்கு அறிவுறுத்தும் வள்ளலார் மருதூரிலே தோன்றினர். மருதூர் ஒரு சிற்றுார். அது சிதம்பரத்திற்கு வடக்கே 20 ேெலா மீட்டர் தூரத்தில் இருக்கிறது. 1822ஆம் ஆண்டில் சிதம் பாத்தில் இருந்து ஒர் துறவி அந்த மருதுாருக்கு நடுப்பகலில் நடந்து போளுர், ஒரு வீட்டின் முன் நின்ருர், பிரணவ மந்திரத்தை இனிய எளிய முறையில் ஒதிக்கெள்ண்டு நின்ருர். பசி மிகுந்தது: ஒரு வீட்டின்முன் நின்று உணவு தர வேண்டினர். வீட்டிலிருந்த பெண்மணி மிகப் பரிவோடு துறவிக்கு அமுது படைத்தார். உண்டு கஃாப்பாறிய துறவி, 'அம்மையே! தங்களுக்கு என்னைப் போன்ற ஆண் குழந்தை பிறக்கும்; அவன் உலகெங்கும் ஒளிநெறி பரவச் செய்வான்' என அன்புடன் வாழ்த்தினர். அவர் வாழ்த்தியபடியே 5-10-1823-ல் அந்தப் பெண்மணிக்கு ஒர் ஆண் குழந்தை பிறந்தது. பெற்ருேர் அதற்கு இராமலிங்கம் என்று பெயரிட்டனர். குழந்தைக்கு ஐந்துமாதம் நிரம்பியதும் பெற்ருேர் அதைச் சிதம்பர ரகசியம் காண எடுத்துச் சென்றனர். திரை தூக்கப்பட்டதும் அங்கே குழந்தை கலகலவென நகைத்தது. நீட்சதர் துறவி சொன்னபடியே குழந்தையைப் பாட்டிர்ை. தம் இல்லத்தில் ஒரு வாரம் குழந்தையுடன் அதன் பெற்ரோகிய திரு. இராமையாவையும் திருமதி சின்னம்மையாரையும் தங்கச் செய்து வழிபட்டார். திரு. இராமையாவுக்கு இராமபிரால்ை வழிபாடு செய்யப் பட்ட இராமேசுவரம் இராமலிங்கத்திடம் பெரும் ஈடுபாடு இருந்தது. அதனுல் தம் குழந்தைக்கு இபவிங்கம் எனப் பெய |ட்டார். சைவ வைணவ சமயங்களில் மரா த்தையும் அந்தப் பெயர் நினேவூட்டுகிறது.