பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

409 மAாவியார் எண்ணி வருந்திர்ை. "பெற்ற அன்னையார் இராம விங்கத்தைப் பேணுவதுபோலவே நான் பார்த்துக் கொள்ளு விறேன்" என்பதுதான் அவர் தம் மாமியாருக்குத் தந்த வாக்கு: அதல்ை இராமலிங்கத்தைத் தம் மகனைப் போலவே அன்புடன் வளtத்து வந்தார். நாள் முழுவதும் இறைவனைப்பாடி வழிபடுவ திலேயே நம் தெய்வக் கவிஞருக்கு ஈடுபாடு இருந்தது. ஒரு நாள் தந்தை இராமையாவின் நினைவுநாள் விருந்து நடந்தது. அந்நாளில் கூட தம்பி கோயிலில் இறைவன் வழிபாட்டி லேயே தன்னை மறந்து இருந்தார். இன்றுகூட தம்பி சாப்பிடும் நேரத்துக்கு வரவில்லையே என்று அண்ணனும் வருந்தினர். எல் லாரும் விருந்து உண்டபின் இளவல் இராமலிங்கம் வந்து ஆறி பொன உணவை உண்ண நேர்ந்தது. அதுகண்ட அண்ணியார் கண் கலங்கினர். 'ஏன் அண்ணி அழுகிறீர்கள்?' என்று கேட்டார் இராமலிங்கம். "தந்தை நினைவு நாளில்கூட எல்லாருடனும் இருந்து சாப்பிட முடியாமல் கோயிலிலேயே இருந்து விட்டாயே தம்பி: அதை நினைக்கும்போது எனக்கு வருத்தமாக இருக்கிறது' என்று அண்ணியார் அழுதுகொண்டே சொன்னர். இதைக் கேட்டு இராமலிங்கம் வருந்தினர். அவர் மனத்தில் ஒரு மாறுதல் ஏற்பட்டது. 'இனி உங்கள் விருப்பம்போலவே வீட்டிலேயே இறை வழிபாட்டை செய்கிறேன்' என்று அண்ணி யார்க்கு உறுதி அளித்தார். 'தம்பி இராமலிங்கம் இனி நம் வீட்டிலேயே தங்கி இறைவழி பாடு செய்யப்போகிறது. தாங்கள் விரும்புகிறபடியே தாங்கள் கற்ற நூல்களே எல்லாம் தானே கற்றுத் தேர்ச்சி பெறப்போவ மாகவும் என்னிடம் தம்பி சொல்லி இருக்கிறது' என்று தம் கணவரிடம் பாப்பாத்தியம்மாள் மகிழ்ச்சியுடன் கூறினர். அண்ணி யாரின் அன்புக் கட்டளையை அப்படியே நிறைவேற்றினர். தெய் வீகக் குழந்தை கவிஞரான இராமலிங்கம், வீட்டிலிருந்து நிலைக் கண்ணுடி முன் விளக்கேற்றி வைத் துப்பாடி வழிபாடு புரிந்தே கற்கவேண்டிய அனைத்துக் கல்வியையும் கற்று உணர்ந்தார். பல பிறவிகளில் கற்கத்தக்க நூல்களை எல்லாம் சில ஆண்டு களில் கற்றுத் தேர்ந்தார். ஒரு நாள் அண்ணன் உடல்நலம் இல்லாதிருந்தபோது சென்னைச் சோமுச் செட்டியார் வீட்டில்