பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 திருநல்லூர்ப் பெருமணம் என்ற ஊரில் நம்பியாண்டார் நம்பிகள் என்று ஒருவர் இருந்தார். அவருடைய மகளை மணம் பேசினர். திருமணச் சடங்குகளும் நடந்தன. சம்பந்தர் மன மகளுடன் கோயிலை அடைந்தார்; “கல்லூர்ப் பெருமணம்' என்ற பதிகம் பாடினர். இப் பதிகம் பாடியதும், “இங்கே இருக்கிற எல்லோரும் சோதியில் சேருவீர் ஆகுக' என்று அசரீரி கேட்டது. ஒரு பெரிய சோதியும் காணப்பட்டது. அந் நாள் வைகாசி மாதம் மூல நாள். சம்பந்தர் காதலாகிக் கசிந்து' என்ற பதிகம் பாடினர்; திரு மனத்துக்கு வந்திருந்த யாவரையும் சோதியில் புகுமாறு செய் தார். கடைசியில் தாமும் தம் மனைவியுடன் சோதியில் கலந்தார். பூழியர்கோன் வெப்பு ஒழித்த புகலியர் கோன் கழல் போற்றி” திருச்சிற்றம்பலம்.