பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

413 லகு எலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன்' என்ற தெய்வீகத் திருவருள் வாக்கை விளக்கி மூன்று மணி நேரம் சொற்பொழிவு ஆற்றினர். இந்தக் கல்விச் சொற்பொழிவுக்குப் பிறகு அண்ணனும் அண்ணியும் தெய்வீகக் கவிஞர் இராமலிங்கம் முருகன் திருஅவ காரமே என நம்பி வழிபாடு செய்தனர். இதை ஏற்க இயலாமல் பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகல்' என்ற கலித்தொகை மனிமொழிக்கு ஏற்ப இராமலிங்கம் வீட்டைவிட்டே சென்று விட்டார். திருவொற்றியூரில் ஆலய வழிபாடும் ஆசான் வழி பாடும் புரிந்துகொண்டு 33 ஆண்டுகள் அருள்மிகு வடிவுடை மாணிக்க அம்மையையும் அருள்மிகு தியாகராயப் பெருமானேயும் வழிபட்டு வந்தார். பெரும் புலவர் பலர் தம் ஐயங்களை நம் தெய்வக் கவிஞரிடம் கேட்டுத் தெளிந்தனர். தொண்டை மண்டலம் என்பது தவறு. தொண்ட மண்டலம் என்பதே சரியானது என நம் கவிஞர் விளக் விரும். ஒரு பெருந்துறவியார் கட்டளையை ஏற்றுத் தம் தமக்கை ம வளு முலை அம்மையாரின் மகள் தனக்கோடியை மணந்து கொண்டார். தனக்கோடியை தம் மாணவியாகவே ஆக்கிக் கொண்டார். கந்தகோட்ட முருகன் மீது 31 பாடல்கள் அடங்கிய தெய்வ மணிமாலை முதலிய பாடல்களை அருளினர். 1858 ஆம் ஆண்டில் தெம்பரத்திற்கு சென்ருர், அங்கே அவரைக் கண்டு வணங்கிய கருங்குழி அன்பர் அவரைத் தம் வீட்டிற்கு அழைத்துச் சென்ருர், இாமலிங்க அடிகள் அங்கிருந்தே அடிக்கடி சிதம்பரம் சென்று நடராஜப் பெருமானை வழிபட்டார். தம் பெயரையே சிதம்பரம் இராமலிங்கம் என மாற்றிக்கொண்டார். எல்லாச் சமயத்தவரும் வந்து வணங்கிய சிதம்பரம் கோயில் திருப்பணி செய்ய நம் இராமலிங்க அடிகள் விரும்பினர். அதனே அப்போது சிதம்பரத்தில் இருந்த தீட்சதர்கள் பற்க மறுத்தனர். எனவே பார்வதிபுரம் கிராமத்து அன்பர்கள் கந்த எண்பது காணி நிலத்திலே உத்தர ஞான சிதம்பரத்தை உருவாக்கிரும், அந்த இடத்துக்கு வடலூர் என்ற பெயரைச் சூட்டிம்ை. விதம்பரத்தைப் | வரு மன விதம்பரம் என வழங்கினர்.