பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.18 இருக்கும் அமுத ஒளியை நோயாளிகளிடம் பரவச் செய்து நோய் திர்க்கிரு.ர். வள்ளலார் தம் உடம்பில் இருக்கும் அமுத ஒளி மூல மாகவே நோய் தீர்த்திருக்கிரு.ர். எனவே மின் துகள் அருவியாகிற மின்சாரம் போலவே மின் துகள், உயிர் ஒளித்துகள், உலக ஒளித்துகள் அமுத ஒளித்துகள் அருவிகளும் வேலை செய்கின்றன. உயிர்களுக்கு ஆற்றலை வழங்கு கின்றன என்று அறிகிருேம். இவற்றை சத்திய ஞானசபையின் வழிபாட்டின் மூலமாகவே அடையலாம். வள்ளலாரின் அண்ட பிண்ட கணிதம் உலகம் எங்கும் பரவப் போகிறது. உலக மக்கள் எல்லாரும் அதைக் கற்கப்போகும் நாள் துரத்தில் இல்லை. அது மிக நெருங்கிக் கொண்டிருக்கிறது. திருஅருட்பாப் பாடல்களில் இருக்கும் சில உண்மைகள்: வள்ளலார் அமுத ஒளி நெறியாளர். சாதி, மத, சமயம் கடந்தவர். அன்பு எனும் பிடியுள் ஆண்டவனைப் பிடித்தவர். அருட்பெருஞ் சோதியே ஆண்டவர் எனக் கண்டவர். அவர் அன்பையும் அருட்பெருஞ் சோதியையும், ஒருமைப் பாட்டு உரிமையையும், புதிய ஐந்தெழுத்து ஆட்சியையும் காட்டி யவர். (1-4) மேலே குறித்து விளக்கியபடியே பார்த்தாலும் ஈர்த்தாலும் இனிக்கும் தெய்வக் கரும்பையும், வெண்ணிலா மனத்தையும், அருள் விளக்கையும், இடர்க்கடல் கடந்து பெற்ற பேற்றையும் பற்றிப் பாடுகிருt. (5-8) அவர் பசி தீர்க்கும் அமுதையும், பொது நடத்தையும், ஆடிய பாதத்தையும் அருள் வரும் தருணத்தையும் அறிவிக்கிருர். நம் வள்ளல் பெருமானர் அருட்பெருஞ் சோதி ஆண்ட வருடன் ஆடிய ஆட்டத்தையும், கண்ணும் மூளையும் இதயமும் உண்ணும் அமுத ஒளியையும், அருளார் அமுதத்தையும், அம் பலத்து அரசையும் பற்றி அனுபவித்துப் பாடுகிரு.ர். அருள் பெரும் சோதி! அருள் பெரும் சோதி! தனிப் பெரும் கருணை! அருள் பெரும் சோதி!