பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

433 பெருநெறி பிடித்து ஒழுக வேண்டும் மதமானபேய் Perunerri pidiththu ozhuga vēnndum madhamaana pēi பிடியாது இருக்க வேண்டும் Pidiyaadhu irukka ventudum மருவு பெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனே Maruvu penn aasaiyai Marrakkavē vēnndum unai மறவாது இருக்க வேண்டும் Marra vaadhu Irukka vēnndum மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற Madhivēnndum ninka runnai nidhivēnndum noyatra வாழ்வில் நான் வாழவேண்டும் Vaazhvil naan vhazhavënndum தரும மிகு சென்னையில் கந்த கோட் டத்துள் வளர் Tharuma migu sennaiyil kandha köt taththul1 vallar தலம்.ஒங்கு கந்தவேளே Thala mõngu Kandhavēllē தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி Thannmugath thuyyamanni Unnmugach saivamanni சண்முகத் தெய்வமணியே! Shannmugath dheivamanniye! மனம் ஒரே செயலுடன் இருந்து உனது பூப் போன்ற திருவடிகளை நினைப்பவர்களே உத்தமர் எனப்படுவார்கள். அத் தகைய சிறந்தவர்களின் நட்பு எனக்கு வேண்டும். மனத்தில் ஒன்று வைத்துக் கொண்டு வெளியே ஒன்று பேசு பவர்களின் நட்பு எனக்குக் கூடாது. பெருமை பொருந்திய உன் புகழைப் பேசவேண்டும். பொய் பேசாமல் இருக்க வேண்டும். முத்தி அடைவதற்கு உரிய வழியைக் கடைப்பிடித்து இருக்க வேண்டும். பெண்கள் மேல் கொள்ளும் ஆசையை மறந்து போக வேண்டும். (கடவுள் ஆகிய) உன்னை மறக்காமல் இருக்க வேண்டும். நான் அறிவு பெற வேண்டும். உன்னுடைய அருள் ஆகிய செல்வம் எனக்கு வேண்டும். நோய் இல்லாத வாழ்வு பெற்று நான் வாழ வேண்டும்.