பக்கம்:சிவ வழிபாடு.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குழந்தைகளிடத்தில் இப்படி அன்பு காட்டுவது ஒருவர் இடத்தி லிருந்து பிறர் ஒருவரிடத்தில் மாறிச் செல்லும் பொழுது அந்த அன்பின் நிலையும் தரமும் மாறிக்கொண்டே போகிறது. ஆனால் மாறாதவாறு, ஒருபடித்தாக இன்னும் சொல்லப் போனால் அதிகரித்துக்கொண்டே இருக்கும் அன்பு உண்டு. அது எல்லையில்லாத கருணை நல்கும் இறைவன் இடத்துக் காட்டும் அன்பே ஆகும். அவ்வன்பு வற்றாத ஊற்றுப் போன்றது. அன்பு காட்டக் காட்ட முருகிவளர்வது எல்லை யில்லாதது அழியாத இன்பத்துக்கு வித்து ஆவது. ஆகவே இறைவனிடத்தே அன்பு செலுத்துவது அவசியம் ஆகும். தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழும் செழும்சுடரே Deayvath thirumalaich Chenggõttil vaazhum sezhum sudare வைவைத்த வேற்படை வானவனே மறவேன் உனைநாள் Vaivaiththa vērrapadai vaanavanē rnarraven Unainaan ஐவர்க்கு இடம்பெறக் கால் இரண்டு ஒட்டி அதில் இரண்டு Aivarkku idamperrak kaal iranndu otti adhil iranndu கைவைத்த வீடு குலையுமுன்னே வந்து காத்தருளே Kaivaiththa Veedu kulaiyumunnē vandhu kaaththarullē. திருச்செங்கோடு என்பது தெய்வத்தன்மை பொருந்திய மலை ஆகும். அம்மலையில் கோயில்கொண்டு இருக்கும் சுடர் போன்றவனே! கூர்மையான வேற்படையுடையவனே! வானவர் உலகத்து இருப்பவனே! நான் உன்னை மறக்க மாட்டேன். மெய் வாய் கண் மூக்குச் செவி என்ற ஐம்பொறிகளுக் கும் இடம் தந்தது-இரண்டு கால்களை உடையது - இரண்டு கைகளை உடையது - இந்த உடம்பு, இந்த உடம்பாகிய வீடு அழிவதற்கு முன்பு நீ வந்து காத்தருள்வாயாக. Oh effulgent light residing at the celestial hill Thirucchengodus Oh Lord residing in the heavens having sharp weapon, the javelin' Never will I forget Thee. The abode of the five elements is the body. It has two legs and two hands. Before this house viz the body becomes dwindled, Oh Lord! please do come and protect me. 92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/102&oldid=833316" இலிருந்து மீள்விக்கப்பட்டது