பக்கம்:சிவ வழிபாடு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(46) ஒருவர்க்கு மனம் ஒன்று நினைக்கும், வாய் ஒன்று சொல்லும், கை ஒன்று செய்யும், கண் வேறொன்றை நோக்கும். ஒன்று செய்வதை மற்றொன்று பின்பற்றாமல் மாறுபட்டு இருக்கும். இதைத்தான் மனம்போன போக்கு என்பர். இப்படி மனம் அலையக்கூடாது. மனம் ஒருவழிப் பட்டிருக்க வேண்டும். அப்போது தான் பிற அங்கங்களும் செவ்வனே இயங்கும். ஆகவே மனத்தை அலையவிடாமல் ஒருவழிப்படுத்துவதற்குச் சிறந்த முறை தியானம் ஆகும். அங்ங்னம் சித்தத்தை ஒருவழிப்படுத்திச் சிவன்பாலே வைத்தால் அளவற்ற பயன் கிடைக்கும். சேந்தனைக்கந்தனைச்செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல் Sēndanaik Kandhanai Senggõttu verrpanaict segnchudarvēl வேந்தனைச் செந்தமிழ்நூல் விரித்தோனை விளங்குவள்ளி Vēndanaich. senthamizhnuul viriththonai villanggu Valli காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில்வாகனனைச் Kaanthanaik Kandhak kadambanaik kaarmayilvaagananai£h சாந்துணைப்போதும் மறவாதவர்க்கு ஒரு தாழ்வில்லையே Saandhunnaippõdhum marravaadhavarkku oru thaazhvillaiyē அவன் சேந்தன், அவன்தான் கந்தன், அவன் திருச்செங்கோடு என்ற மலையில் வாழ்பவன் சிவந்த ஒளி பொருந்திய வேலை ஏந்திய வேந்தன் செந்தமிழ் நூல்களை விரிவு படுத்தியவன்; சிறந்த வள்ளியம்மையார்க்குக் கணவன்; கந்தக் கடம்பன்: மயிலை பே 'தின் "அது உடையவன்; இத்தகைய முருகனை) சாகின்ற காலத்திலேயாவது மறக்காமல் இருந்தால் அவர்களுக்கு எந்தத் தீங்கும் இல்லை. He is Sendhan; He is Skanthan; He resides at the Hill Thirucchengodu; He is the royal One having an effulgent javelin; He expounded (the ecclesiastical) works in (classical and Literary) Tamil; 93

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/103&oldid=833318" இலிருந்து மீள்விக்கப்பட்டது