பக்கம்:சிவ வழிபாடு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

He is the husband of Valli; the great; He is Skantha (wearing the garland of) Kadamba flower; He is the rider of the Peacock: Him if one should (never forgetting) think of, at least at the time of death, to them nothing untoward will happen. (47) ஆசை என்பது ஒரு குரங்கு அதன் குறும்புக்கு அளவு கிடையாது; ஒரு இவளை உணவு இருப்பின் இரண்டு வேளை களுக்கு வேண்டும் என்று தோன்றும்; இருவேளைக்குக் கிடைப்பின் காலை மாலை சிற்றுண்டிகளைக் கேட்கும், வாய் உணவு திருப்தி அடைந்ததாக வைத்துக்கொள்வோம், கண்க ளுக்குக் காட்சி உணர்வு வளரும். அதுவும் நிறைவுறுவதாக வைத்துக் கொள்வோம்; காதுக்கு இனிய இசையில் விருப்பம் செல்லும், இப்படித் தேவைகள் தாம் அதிகம் ஆகுமே ஒழிய ஆசைக்கு அளவுகிடையாது. அதனால் தான் செல்வம் என்பது சிந்தையின் நிறைவே என்றார் குமரகுருபர முனிவர். இருப்பதைக் கொண்டு மனநிறைவு உடையவராக இருக்கப் பழகினால் போட்டியும் இல்லை; பொறாமையும் இல்லை; எல்லாருடன் இன்பமாகப் பழகவும் முடியும், சகோதரத்தும் ஒங்கும் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை. தோலால் சுவர்வைத்து நாலாறு காலில் சுமத்தி இரு tholaal suvarvaiththu naalaarru kaalil sumaththi iru காலால் எழுப்பி வளைமுது கோட்டிக் கைந்நாற்றி நரம் Kaalaal ezhuppi vallaimudhu' kõttik kainnaatri Пага|ПП பாலார்க்கை யிட்டுத் தசை கொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால் Paalaarkkai yittuth thasai konndu mēynda agampirindhaal வேலால் கிரி துளைத்தோன் இருதாள் அன்றி வேறில்லையே. Velaal Giri thullaihthon iruthaall anrri vērrillaiyē இந்த உடம்பு ஆகிய வீடு தோலால் ஆகிய சுவர் வைக்கப் பட்டது; இதை இருபத்து நான்கு எலும்புகள் சுமக்கின்றன. இரண்டு கால்கள் எழுப்பியிருக்கிறது. வளைந்த முதுகு உடையது; இரண்டு கைகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன: 94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/104&oldid=833320" இலிருந்து மீள்விக்கப்பட்டது