பக்கம்:சிவ வழிபாடு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சைவம் முதலாய கணக்கில்லாச் சமய நெறிகளையும் அமைத்தாய் சமயத்தையும் கடந்த மெளன. சமரசம் வகுத்தாய். இவ்வாறு செய்த நீ நான் உன்னை அணுகுவதற்கு உரிய கருணையை ஏற்படுத்தவில்லையோ? பொய்யே வளரும் நெஞ்சை உடையவர்கள் காண முடியாதவனே! பொய்யே இல்லாத மெய்யே உடையவர்களின் அறிவில் நிறைந்த அறிவாகவும், நீக்கம் அற நிற்கும் உருவத்துடனும் இருப்பவனே! பிறத்தலும் இறத்தலும் இல்லாதவனே! தெய்வத்தன்மை பொருந்திய வேதங்களின் முடிவாகிய, ஒம் எனும் மந்திரத்தின் உருவமாக விளங்குபவனே! சித்தாந்த முத்திக்கு முதலாக இருப்பவனே! சிராப்பள்ளியில் விளங்கும் படியான தகவிணாமூர்த்திக் கடவுளே! அறிவு மயமான ஆனந்த மயமான குருவே! You created the elements the earth, air, water, fire and | sky; In them You created the movables and the immovable objects. You gave wisdom; You awarded the Vedas and the other scriptures; You were pleased to create many or countless religious ways. You have created above all Mauna-Samarasa (silence and equanimity). Though all these are Your deeds, You had not created a way to make me approach Thee. * Oh Lord who cannot be perceived by those whose hearts are filled with untruth; 101

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/111&oldid=833339" இலிருந்து மீள்விக்கப்பட்டது