பக்கம்:சிவ வழிபாடு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதுமட்டும் அன்றி இரண்டு கைகள் குவித்து வணங்கலாம் என்றால் என் மனம் வெட்கம் அடைகின்றது. ஏன் எனில் என் உள்ளத்தில் நீ நிற்கிறாய். ஆகவே நான் கை கூப்பும் பொழுது அது பாதிக் கும்பிடாக முடிவதால், நான் பூசை செய்வது முறைமை ஆகுமோ! ஆகாசமாக இருப்பவனே! ஆகாசம் முதலாக ஐம்பூதங்களாக விளங்குபவனே! ஒளிமயமாக இருப்பவனே! வேத வடிவத்தை யுடையவனே! வேதமுடிவாக இருப்பவனே! மேன்மை பொருந்திய சொல்வடிவு ஆனவனே! அச்சொற் பிரபஞ்சத்தில் விதையாக உள்ளவனே! கண்போன்று விளங்குபவனே! கருத்தாக உள்ளவனே! எண்ணமாகவும் எழுத்தாகவும் இருப்பவனே! மோக்ஷகதி அடைவிக்க மோன வடிவில் உள்ளவனே! மனத்தாலும் கருதுவதற்கு முடியாத சிற்சபையில் ஆனந்த நடனம் ஆடும் கருணைக்கடல் ஆகிய சிவபெருமானே I do not perform worship by having a particular form of Yours. | adore You by meditation in my mind. (while doing so) | see You seated in the flower that I look at. Hence my mind is not inclined to pluck those cool flowers. Apart from this, my hands, even to worship joined and raised, feel bashful; for You abide in my heart. So when I worship with hands joined and raised, it is but half worship. Hence is it proper on my part to perform worship? 111

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/120&oldid=833359" இலிருந்து மீள்விக்கப்பட்டது