பக்கம்:சிவ வழிபாடு.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்னை ஒவ்வொரு பிறவியிலும் பெற்ற தாய்கள் எத்தனை? (கணக்கு இல்லை). என்னை ஈந்த தந்தையர்கள் எத்தனைப் பேர் (அதற்கும் கணக்கு இல்லை). (ஒவ்வொரு பிறவியிலும்) மனைவியாக வாய்த்தவர் எத்தனை பேரோ? (தெரியாது). பிறந்த குழந்தைகள் எத்தனையோ இந்தப் பிறவிக்கு முன் எத்தனை பிறவி எடுத்து இருக்கிறோம்? மறைத்து வைத்திருக்கிறாய்! அடியேனும் அதை அறிய முடியவில்லை. இனிமேல் எத்தனை எத்தனை பிறவிகள் உண்டோ? நான் என்ன செய்வேன்! காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டிருக்கிற ஏகம்பப் பெருமானே! Mothers how many; how many are mothers? Fathers how many; how many are fathers? Then how many and how many are wives? Children how many; how many are children? Previously how many; how many are the births? You shut me not; I bondsman is ignorant of, still how many; how many the births be? What shall I do? Oh Lord residing in Ekambam at Kanchipuram. (57) பிறப்பதும் இறப்பதும் உடலில் உள்ள உயிரின் குணம் ஆகும். பிறவி நீங்க ஒரு வழி உண்டு நல்வினைகள் செய்தால் அதற்குரிய பலன் ஆகிய நன்மைகளை நுகர வேண்டும் தீவினை செய்தால் அதற்குரிய தீமைகளை அனுபவிக்க வேண்டும்; இரு வினைகளின் பயனும் நீங்கினால்தான், இறைவனின் சக்தி பதியும்; இறைவனின் சக்தி பதிவதற்கு இறைவனைத் தியானிப்பதுதான் சிறந்த வழி. தியானம் இருக்கிறதே அது பிறவியைப் போக்கும் மருந்து தியானம் இறைவனுடைய திருவடியில் சேர்ப்பிக்கும்; இறை நிலையை அடைவிக்கும்; இறைவனோடு கலந்து பேரின்பம் பெறச்செய்யும். தியானமே பிறவி போக்குவதற்குரிய சாதனம் ஆகும. 115

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/124&oldid=833366" இலிருந்து மீள்விக்கப்பட்டது