பக்கம்:சிவ வழிபாடு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(58) உடம்பு வேறு-உயிர் வேறு; உடம்பில் உயிர் இருக்கிறது என்பதை மூச்சுவிடும் தன்மையால் அறிகிறோம். அதனால் மூச்சுத் தான் உயிர் என்று நினைக்கக்கூடாது. இந்த உடம்பில் உயிர் இருக்கிறவரையிலும் உடம்பு சிறந்ததாகவே கருதப்படும். உடம்பினின்று உயிர் நீங்கினால் உடம்பைப் பிணம் என்பர். உடம்புக்கும் உயிருக்கும் எப்பொழுதும் நட்பு இல்லை. ஒரு முட்டையிலிருந்து குஞ்சு பறந்து போகும். அதுபோலவே உரிய காலம் வந்ததும் உயிரும் உடம்பைவிட்டுப் போய்விடும். ஆகவே உடம்பைச் சிறந்த ஒரு பொருளாகக் கருதுதல் வேண்டா. ஆனால் உடம்பில் உயிர் செய்யும் தவம் காரணமாக இறைவன் இந்த உடம்பையே கோயிலாகக் கொள்வான் ஆகையால்தான் இந்த உடம்பை நன்கு பாதுகாக்க வேண்டும். அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே விழி அம்பொழுக Aththamnum Vaazhvum agaththumatte Vizhi ampozhuga மெத்திய மாதரும் விதிமட்டே விம்மி விம்மி யிரு Meththiya maadharum veedhimattē vimmi vimmi iru " கைத்தலை மேல் வைத்து அழும் மைந்தரும் Kaiththalai mēl Vaiththu azhum maintharum சுடுகாடுமட்டேsudugaadumatte பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே._ Patrrith thodarum iruvinaip punnnniya pavavarnume. செல்வமும், சிறந்த வாழ்க்கையும் வீடு வரையில்தான். கண்களில் கண்ணிர் பெருக வருந்தும் மனைவியும் தெரு வரையில்தான்; பெருமூச்சு விட்டுக் கையைத் தலைமேல் வைத்து அழுகிற பிள்ளைகளும் சுடுகாடு வரையில் வருவர் ஆனால் உயிரைப் பற்றித் தொடர்பவை, இருவினைகளும் அவற்றின் பயன் ஆகிய புண்ணியமும் பாவமும் ஆம் 117

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/126&oldid=833371" இலிருந்து மீள்விக்கப்பட்டது