பக்கம்:சிவ வழிபாடு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

She carried me for ten months. With pain in all parts of the body she begot a child. Hearing that it was a male child, she kept her both hands together beneath the child, took it up with love and fed it with her breast milk (Alas! such a mother, I lost). In which birth can I meet her again? (60) இந்த உடம்பு புலால் நாறுவது புழுக்கூடு, உயிர் விட்டுப் போனதும் இதை ஒருவரும் விரும்பார் உடனே அகற்றி விடவே நினைப்பர் சிலர் சுடுவர் புதைப்பர் கழுகுகளுக்கு இடுவர் பெரு வெள்ளத்தில் விட்டிடுவர் நாட்டுக்கு நாடு இதில் வேறுபாடு. சுட்டால் என்ன? புதைத்தால் என்ன? எல்லாம் ஒன்றுதான். உடம்பு நிலையாதது என்று மட்டும் உண்மையாக - அழுத்தமாக - உணர வேண்டும். உணர்ந்தால் - சினம் - இல்லை - வேறுபாடு இல்லை - உயர்வு தாழ்வு இல்லை - வலியார் எளியார் இல்லை - குற்றங்கள் நீங்கும் குணங்கள் பெருகும். நன்மை பெருகும்; தீமைகள் நீங்கும் அச்சம் போகும் அன்பு பெருகும்; உண்மை ஒங்கும்; எல்லோரும் இன்புறுக என்ற எண்ணம் தோன்றும் வளரும்; சகோதரத்துவம் நிலைபெறும். முன்னையிட்ட தி முப்புரத்திலே Munnaiyitta Thee Muppuraththile பின்னையிட்ட தி தென்இலங்கையில் Pinnaiyita The Then langgaiyil அன்னையிட்ட தி அடிவயிற்றிலே Annaiyitta Thee adivayitriiē யானும் இட்ட தி மூள்கத மூள்கவே Yaanum |tta Thee mūliga mullgavē முன் ஒருகால் சிவபெருமான் கோபப்பட்டார். கோபத்தில் தீப்பிறந்தது; அத்தீ திரிபுரங்களை அழித்தது. பின்னர் ஒரு சமயம் இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றான் அனுமனைக் கொல்வதற்காக அவன் வாலில் தீப்பற்றச் செய்தனர்; அத்தி இலங்கையை அழித்தது. என்தாய் இறந்தாள். அதனால் என் அடிவயிற்றில் துன்பம் காரணமாகத் தீப்பற்றி எரிகிறது. அவள் இறந்ததால் அவளைத் தகனம் செய்யத் தீ இடுகிறேன். அந்தத் தீயானது மூண்டு வளர்க! 119

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/128&oldid=833375" இலிருந்து மீள்விக்கப்பட்டது