பக்கம்:சிவ வழிபாடு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவனுடைய மலர் போன்றதும் சிலம்பு அணிந்ததும் ஆன திருவடிகளை வாழ்த்துவோம்; வணங்குவோம். He is unperceivable through the five senses and his rareness cannot be expounded even by greatmen. He has matted locks where the crescent moon moves about and the Ganges abounds; He is abundant effulgent light; He dances at the Hall of Wisdom! His flower like Feet adorned with anklets, we shall praise and worship. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி திருவருட்பிரகாச வள்ளலார் அருளிச்செய்த விண்ணப்பம் எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள், மக்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம் ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனதில் பற்றாவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும். எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்! திருச்சிற்றம்பலம் 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/13&oldid=833379" இலிருந்து மீள்விக்கப்பட்டது