பக்கம்:சிவ வழிபாடு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருட்பா ΤΙΚUΑRUΤΡΑ (62) எங்கும் இருள் என்றால் அதை வெறுக்கிறோம். அதைப் போக்க ஒளி வேண்டும். ஒளியைத் தருபவன் யார்? சூரியன் என்று உடனே பதில் சொல்வோம். சூரியன் இல்லாத காலத்தில் மின்னொளி ஒளி தருகிறது என்போம். இவ்வொளிகள் எல்லாம் எங்கு இருந்து வந்தன? யார் உண்டாக்கியவை. சூரியவொளி சூரியனுடையது. மற்ற ஒளிகள் செயற்கை நம் அறிவால் ஆனவை என்போம். சூரியனுக்கு ஒளி தந்ததும் இறைவனே! செயற்கை ஒளிகளை உண்டாக்கும் அறிவு தந்தவனும் இறைவன்தான். அவன் அறிவுமயம் ஆனவன்! அவனே ஒளி மயம் ஆனவன். அவன் அருள் பெறுவோம், ஒளி, பெறுவோம். அருள்சோதித் தெய்வ ம்எனை ஆண்டுகொண்டதெய்வம் Aruljothith dheivamenai aanrıdukOrında dheiVann அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் Ambalaththē aadugindra aanaanthath dheivam பொருள்சாரும் மறைகள் எல்லாம் போற்றுகின்ற தெய்வம் Porullsaarum maraigall ellaam potrukindra dheivam போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம் põdhantha dheivamuyar naadhanthath dehivam இருள்பாடு நீக்கிஒளி ஈந்து அருளும் தெய்வம் lrullpaadu neeki olli eendhu arullum dheivam எண்ணியநான் எண்ணியவாறு எனக்கருளும் தெய்வம் Enniyanaan enniyavaarru enakkaruIIum dheivann தெருள்பாடல் உவந்து எனையும் சிவமாக்கும் தெய்வம் Therullpaadal uvandhu enaiyum Sivamaakkum dheivann சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் Sirrsabaaiyil villangukindra dheivam athe dheivam. அவன் அருள் ஆகிய விளக்கு அளிக்கும் ஒளி அவன் என்னை ஏற்றுக்கொண்ட கடவுள். அவன் (தில்லையில்) அம்பலத்தில் ஆடுகிறவன்; 122

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/131&oldid=833383" இலிருந்து மீள்விக்கப்பட்டது