பக்கம்:சிவ வழிபாடு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருஞான சம்பந்தர் தேவாரம் TI I I RUGNAANA SAMBANDAR THEVAARAM (4) இறைவன் எங்கும் இருப்பான். அவனுக்கு மக்கள் உருவம் கொடுத்து வணங்குவர். யார் எந்த வடிவில் நினைக்கிறார்களோ அந்த உருவில் வருவான். அவனுக்கு என்று ஒரு தனி உருவமும் இல்லை. அவனை ஆணாக நினைத்தால் ஆணாக வருவான். பெண்ணாக நினைத்தால் பெண்ணாக வருவான். அவன் எங்கும் உளன். எவ்வுருவிலும் உளன். எல்லாருடைய மனத்திலும் தங்கியிருப்பான். அவனை அன்போடு நினைக்கவேண்டும். அப்போது அவன் கட்டாயம் வருவான். திருச்சிற்றம்பலம் தோடுடைய செவியன் விடையேறி ஒர் தூவெண் மதிசூடிக் Thodudaiya seviyan vidaiëri or thUTvenn madhi sudi காடுடைய சுடலைப் பொடியூசி என் உள்ளம் கவர்கள்வன் Kaadudaiya sudalaip podipūsi en UIIIlan kavar kall Van துடுடைய மலரான் முனைநாள் பணிந்துஏத்த அருள்செய்த Edudaiya malaran munainaall pannindhuëtha arull seydha பிடுடைய பிரமாபுரம் மேவிய பெம்மான் இவன்அன்றே Peedudaiya bramaapuram mēviya pemmaan ivanandrrē காதணி உள்ள செவி உடையவன்; எருதை வாகனம் ஆக உடையவன் சுத்தம் ஆனதும் வெள்ளையாக இருப்பதும் ஆன சந்திரனைச் சூடியவன் சுடுகாட்டில் உள்ள சாம்பலை உடம்பில் பூசுபவன் - இவன் என் மனத்தைத் திருடிய திருடன். தாமரை மலரில் இருப்பவன் பிரமன்; அவன் முன் ஒரு காலத்தில் சிவனை வணங்கினான் துதித்தான். சிவன் பிரமனுக்கு அருள் செய்தான். பிரமன் பூசித்தால் பிரமாபுரம் என்று பெயர் பெற்ற சீர்காழியில் இருக்கும் இறைவனே எனக்கு அருள் செய்தான்; இதோ பார்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/14&oldid=833401" இலிருந்து மீள்விக்கப்பட்டது