பக்கம்:சிவ வழிபாடு.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புச் செய்தான் - இங்ங்னம் எனக்கு அருளிய இத்தன்மையை வேறு யார் பெறுவார்கள்.

I wanderd with the ignorant who know not the way of salvation. He severed me of the three fold impurities. He is the Beginning and the primal One. He made me, the worshipper of His Feet, a worthy one - like a dog placed into a palanquin. Thus He blessed. Who else can get this way of Blessing bestowed on me? (69) கண் போன்றது கல்வி. இவ்வுலக வாழ்விற்கு மிகவும் இன்றியமையாதது கல்வி. கல்வியால் பெறும் நற்பலன் நல்லறிவு பெறுதல். ஞான அறிவு பெறுதல். அதனால் இறைஞானம் உண்டாகும். எனவே நாம் வாழ நம்மிடம் உள்ள எல்லாப் பிழையும் நீங்க நல்லறிவு, ஞான அறிவுபெற ஆண்டவனை வழிபடுவோம். கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்து உருகி Каllaар pizhaiyum Karuthap pizhaiyum Kasindhurugi நில்லாப் பிழையும் நினையாப் பிழையும் நின் ஐந்தெழுத்தை Nillap pizhaiyum Ninaiyaap pizhaiyum NinAindhezhUththai சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப்பிழையும் Sollaap pizhaiyum Thudhiyaap pizhaiyum Thozhaappizhaiyum எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சிஏகம்பனே Ellap pizhaiyum Porruththarullvaay Kachchi Eagambane அறிவு நூல்களைக் கற்காத பிழை - இறைவனை நினைத்து மனம் உருகி நில்லாத பிழை - இறைவனது திருநாமம் ஆகிய திருவைந்தெழுத்தைச் சொல்லாத பிழை - இறைவனாகிய உன்னைத் துதிக்காமல் இருந்த பிழை - உன்னைத் தொழாத பிழை - இவ் எல்லாப் பிழைகளையும் பொறுத்து எனக்குக் கருணை செய்வாயாக! கச்சி ஏகம்பப் பெருமானே - 136

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/145&oldid=833412" இலிருந்து மீள்விக்கப்பட்டது