திருமுனைப்பாடியை அந்நாளில் நரசிங்க முனையரையன் என்ற அரசன் ஆட்சி செய்திருந்தான். அவர் தம் வளர்ப்பு மகனாக எல்லாக் கலைகளையும் கற்று அரண்மனையில் நம்பி ஆரூரர் வளர்ந்தார். மணப்பருவம் அடைந்தார். o திருமண நாளில் . இவரை தடுத்தாட்கொள்ளச் சிவ பெருமான் திருவுளங்கொண்டார். ஒரு முதிய அந்தணர் வடிவில் வந்து சுந்தரரைத் தம் அடிமை என்று வாதிட்டு வென்றார். அதனால், திருமணம் நின்றது. சிவபெருமானை முதலில் அறிந்து கொள்ளாத சுந்தரர். "பித்தா" என்று ஏசினார். இறைவனிடம் வன்மையாகப் பேசியதால் வன்தொண்டர் என்றும் பெயர் பெற்றார். ஏசிய சொல்லையே. முதலில் வைத்துப் "பித்தா பிறை சூடி" என்று தொடங்கி, இனிய தேவாரப் பதிகங்களைப் பாடினார். தென்னாட்டிலுள்ள பல சிவத்தலங்களுக்கும் சென்று வணங்கிப் பாட்டால் அருச்சனை புரிந்தார். திருவாரூர்க் கோயிலில், பரவையார் என்ற மங்கையைக் கண்டு காதல் கொண்டு திருமணம் புரிந்து கொண்டார். பரவையாருடன் சிலகாலம் வாழ்ந்த பின்னர், மீண்டும் தலயாத்திரை மேற்கொண்ட சுந்தரர், தொண்டை நாட்டில், சென்னைக்கு அருகிலுள்ள திருவொற்றியூரை அடைந்தார். அங்கு திருத்தொண்டு புரிந்திருந்த சங்கிலியார் என்னும் நங்கையைக் கண்டு மனம் பறிகொடுத்தார். சங்கிலியார் ஞாயிறு என்ற ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர். தம்மைப் பிரியாது இருப்பதாக உறுதிமொழி கொடுத்தால், சுந்தரரை மணம் செய்து கொள்வதாகக் கூறினார். சுந்தரரும் அங்கிருந்த ஒரு மகிழ மரத்து அடியில் உறுதி கூறினார். திருமணம் நடந்தது; சில காலம் கழிந்தது. சுந்தரருக்குத் திருவாரூர்ப் பெருமான் நினைவு வந்தது. உடனே, திருவாரூருக்குப் புறப்பட்டார். உறுதிமொழி தவறியதால் சுந்தரர் தம் இரு கண்களையும் இழந்தார். திருவெண்பாக்கத்தில் கோயில் கொண்டிருந்த இறைவன் ஊன்றுகோலை உதவினார். காஞ்சிபுரத்து ஈசன் இடக்கண் பார்வையை அருளினார். திருவாரூரை அடைந்ததும் வலக்கண் ஒளியும் வந்தது. 144
பக்கம்:சிவ வழிபாடு.pdf/153
Appearance