பக்கம்:சிவ வழிபாடு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடிய பாடல்கள் திருவருட்பா' எனும் பெயர் பெற்று. ஆறு திருமுறைகளாகத் தொகுக்கப் பெற்றுள்ளன. சென்னையிலுள்ள கந்தகோட்டம், திருவொற்றியூர் ஆகிய தலங்களைச் சிறப்பித்துப் பாடிய வள்ளலார் 35 ஆம் வயது வரை சென்னை நக்ரில் இருந்தார். இராமலிங்கர் தம் தமக்கையார் உண்ணாமலை அம்மையாரின் மகள் தனகோடி அம்மையாரை மணந்தார். ஆயினும் இல்லறத்தில் ஈடுபடவில்லை. 1858 ஆம் ஆண்டில் சிதம்பரத்திற்குச் சென்று சிறிது காலம் நடராசப் பெருமானை வனங்கிப் பாக்கள் இயற்றியிருந்தார். தம் பெயரையே சிதம்பரம் இராமலிங்கம் என்று வழங்கச் செய்தார். I 86.5 ஆம் ஆண்டில் சிதம்பரத்திற்கு அருகிலுள்ள வடலுாரில் சமரச சுதத சன்மார்க்க சத்திய சங்கத்தை நிறுவினார். சத்தியஞான சபை என்னும் பாட்டை ஏற்படுத்தினார். ஆன்ம நேய ஒருமைப்பாடு, வேகாருணிய ஒழுக்கம் பினியைப் போக்கும் அறச் சாலையாக சத்திய தருமச் சாலையை 1867 ஆம் ஆண்டு. தோற்றுவித்தார். அது இன்றுவரை வடலுாரில் நடைபெற்று வருகிறது. அமைதியை விரும்பிய அடிகளார் வடலுாருக்குத் தெற்கே மூன்று கி. மீட்டர் தொலைவிலுள்ள மேட்டுக் குப்பத்தில் 'சித்திவளாகம் என்ற திருமாளிகையை அமைத்து 1870 ஆம் ஆண்டு முதல் அதில் வசித்திருந்தார். 30-1-1874 தைப்பூச நாள் இரவில் சித்திவளாகத்தில் கூடியிருந்த அன்பர்களுக்கு அறிவுரையும் கூறித் தமது திருவறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டு அருட்பெருஞ் சோதியில் இரண்டறக் கலந்து சித்தி பெற்றார். 'மரணமில்லாப் பெருவாழ்வு பெற்ற வள்ளலாரின் சமரச சன்மார்க்க நெறி, கடந்த நூறாண்டுகளாக உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களில் எல்லாம் சாதி تیLTILL வேறுபாடிகளைக் கடந்து நன்கு பரவியுள்ளது. VALLALAR Saint Ramalinga Adigasar popularly known as Vallalar, gave us the Mantra of 159

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/168&oldid=833462" இலிருந்து மீள்விக்கப்பட்டது