பக்கம்:சிவ வழிபாடு.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. விண்ணப்பம் (வள்ளலார்) Vinnnnappam அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி” எல்லாம்வல்ல அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே! இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பன வற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனதில் பற்றா வண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எள்ளளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும். எல்லா மாகிய தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம் வந்தனம். Hail Thee, O most Gracious Light and of unique compassion Thou who art the Gracious Light and the Wonder of Wonders, grant us our prayer. Lead us out of such disturbing obstacles as differing faiths and professions, castes and creeds and social divisions. Bless us and guide us, Oh Lord in our quest for the True Path which we realise is the basis of Universal brotherhood. We prostrate before Thee and beg Thee to grant us Thy Grace, Oh Lord who art the only True Light. 4. ஞானசம்பந்தர் தேவாரம் - தோடுடைய செவியன் Thodudaya seviyan நினைக்கும் வடிவில் இறைவன் வருவான். எல்லாம் அவன் வடிவங்கள். இதயமே அவன் கோயில் அன்பை வளர்த்தால் ஆண்டவன் வசப்படுவான். என் உள்ளம் கவர்ந்த கள்வனல்லவா அவன்! 163

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/174&oldid=833476" இலிருந்து மீள்விக்கப்பட்டது