பக்கம்:சிவ வழிபாடு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலம் தந்தை இறந்து போனார். தாயும் செத்துப்போனாள். அவர் தாமும் போவர். மூவிலை வேலைக் கையில் ஏந்தி நம்மைக்கொண்டு போவதற்காக யமன் காலம் பார்த்துக் கொண்டு இருக்கிறான். (காலம் வந்ததும்) யமன் நம் உயிரைக் கொண்டு போவான். அது எந்த நாள் (என்று நமக்குத் தெரியாது). நாம் சுகமாக வாழலாம் என்று மனம் கொண்டு இருக்கிறாய் அறிவு இல்லாத நெஞ்சமே! அழகிய குளிர்ச்சி பொருந்திய திருவாரூரில் உள்ள இறைவனை வணங்கிச் சுகம் பெறலாம்: மயக்கம் கொண்டு பயப்படாதே, ஒ நெஞ்சமே! Father has gone; and the nother too; They (their progeny) may also leave (this world); With the trident, the god of death is looking for the time, He would take (us) away; When! (we do not know); You made up your mind to lead a (luxurious) life; O poor mind! Worship the Lord at the pleasant beauteous Tiru Arur and be redeemed; Bewildered, fear thee not, O mind!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/19&oldid=833509" இலிருந்து மீள்விக்கப்பட்டது