பக்கம்:சிவ வழிபாடு.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. தெய்வத் திருமாலை Deiyvath thirumaalai அன்னையிடத்திலன்பு . . . அதன் பிறகு அண்ணன் தம்பி அக்காள் தங்கை மனைவி. சுற்றம் நட்பு. இப்படித் தொடர்ந்து கொண்டே போகும் அன்பு ஒவ்வோர் இடத்திலும் மாறுபட்டிருக்கும். மாறுபடாமல் மாசுபடாமல் தேயாமல் வளரும் அன்பு தெய்வத்திடம் வைக்கும் அன்புதான். அது அழியாத இன்பத்துக்கு வித்து. அதுவே நான் வேண்டும் சொத்து. அதைத் தருவது முருகன் என்ற அருள்முத்து. How wonderful is this feeling of affection? First affection for the mother, then for brothers and sisters after which comes the affection for wife and then for the children. All these affections are subject to change. The one affection which changes not but grows and develops is the love for Thee. It is indestructable. That is the treasure require. Grant me thy Grace Oh Lord Muruga. 46. சேந்தனைக் கந்தனை Senddhanaik Kandhanai நெஞ்சமொன்றை நினைக்கும் . . . வாய் ஒன்றைச் சொல்லும் கண் ஒன்றை நோக்கும். கை ஒன்றைச் செய்யும். இப்படி மாறுபட்டுச் செயல்படுவதே மனம்போன போக்கு. மனம் அலையாமல் ஒரு நிலைப்படுத்த வழி முருகனை நிலைப்பது ஒன்றே. அந்த நினைப்பு சித்தத்தைத் தெளிவாக்கி, செம்மைப்படுத்தி, உய்விக்கும். How much out of control can constantly drifting mind become? The mind thinks of one thing, the mouth utters something else, whilst the hand may perform some thing else. But I do not want to do as the mind pleases. I Want an unwavering mind which is fixed on Thee, Oh Lord Muruga because only such a mind can cleanse and purify my spirit. 181

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/192&oldid=833514" இலிருந்து மீள்விக்கப்பட்டது