பக்கம்:சிவ வழிபாடு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலம் விறகில் தீயைப் போலவும், பாலில் உள்ள நெய்போலவும், சிறந்த மணியில் காணப்பெறும் ஒளி போலவும் இறைவன் மறைந்து நின்று இருக்கிறான். உறவு என்னும் கோலை நட்டு, உணர்வு என்ற கயிற்றைக் கட்டி, முன்னும் பின்னும் இழுத்துக் கடைந்தால், இறைவன் எதிரில் வந்து நிற்பான். He stands unseen-like fire in wood, like ghee in milk and like the brightness in a bright gem. Fix a post called knowledge, take a rope called wisdom, and then churn it. The Lord would stand in front of you. (11) அரிது அரிது மானுடர் ஆதல் அரிது. இப்பிறவி தப்பின் எப்பிறவி வாய்க்குமோ நாம் அறியோம். மானுடப் பிறவி நமக்குக் கொடுத்தது இறைவனே! ஆகையால் இத்தகைய சிறந்த பிறவியை அளித்த இறைவனை மனத்தால் சிந்திக்க வேண்டும், வாக்கால் வாழ்த்த வேண்டும், காயத்தால் தொழ வேண்டும். பல பிறவிகளை எடுத்து வருந்தி உழலும் உயிர் மானிடப் பிறவி கொடுத்த இறைவனை மறக்கக்கூடாது. புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியாஉன் அடிஎன் மனத்தே Puzhuvaayp pirrakkirium punnnniyaaun adienmanathe வழுவாதிருக்க வரந்தரல்வேண்டும் இவ்வையகத்தே Vazhuvaathirukka Varanthara!ver1r1dUrn ivvaiyagaththe தொழுவார்க்குஇரங்கி இருந்துஅருள்செய் பாதிரிப்புலியூர் Thozuwaarkkuirangi irundu arullsey Paadhirip puliur செழுநீர்ப் புனல் கங்கை செஞ்சடை மேல்வைத்த Sezhuneerp punal Ganggai segnchadai mei waiththa தீ வண்ணனே thee VΞΗΓΙΠΠΓΕΗ.ΠΕ புழுவாகப் பிறந்தாலும், புண்ணியனே உன் திருவடி என் மனத்தில் தவறாது இருக்க வேண்டும்-இவ்வரம் எனக்குத் தரவேண்டும். 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/28&oldid=833558" இலிருந்து மீள்விக்கப்பட்டது