பக்கம்:சிவ வழிபாடு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரர் தேவாரம் SUNDARAR DEVARAM (21) இறைவன் தன் திருமுடியில் பிறை சூடி இருக்கிறான். தன் தலையில் கங்கையைத் தரித்து இருக்கிறான். இப்படி அவருக்கு ஒருருவம் கொடுத்தார்கள் நம் பெரியவர்கள். இதன் கருத்து என்ன? இது இறைவனுடைய பேராற்றலையும், அன்பு காட்டும் திறத்தையும் காட்டுகிறது. பிறையைச் சூடிப் பிறையைக் காத்தார். கங்கையைச் சூடி உலகத்தையே காத்தார். இத்தகைய கருணைக் கடவுளை நாம் நாடோறும் வழிபடுவோமாக. ----. திருச்சிற்றம்பலம் பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா Piththaa pirraisūdee perumaanē arullaallaa எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை Eththaan marravadhē ninakkkindrēn manaththu unrhai வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய் Vaiththaay pennnnaith thenpaal vennnney நல்லூர் அருள்துறையுள் nallur arull thurraiyu|| அத்தா --- உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே Aththaa urnakku aallaay ini allen enalaamē பித்தனே! பிறையைத் தலைமாலையாகச் குடி இருக்கிறவனே! பெருமை உடையவனே! அருள் செய்பவனே! சிறிதுகூட மறக்காமல் உன்னை நினைக்கிறேன்; என் மனத்தில் உன்னை வைத்து இருக்கிறாய்; பெண்ணை என்ற பெயருடைய ஆற்றின் தெற்குப் பக்கம் உள்ளது திருவெண்ணெய் நல்லுார். அவ்வூரில் உள்ள கோயிலின் பெயர் திருவருட்டுறை, அத்திருவருள் துறையுள் இருக்கும் தலைவனே! உனக்கு நான் (முன்பே) அடியவன்; இங்ங்னம் இருக்கும் பொழுது) நான் உனக்கு அடியவன் அல்ல என்று இப்பொழுது சொல்லலாமா? 41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/51&oldid=833609" இலிருந்து மீள்விக்கப்பட்டது