பக்கம்:சிவ வழிபாடு.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலம் புகழ் பொருந்திய வேதத்தை ஒதுபவரும் திருநின்றவூர்' என்ற ஊரில் உள்ளவரும் ஆன பூசலார்' (என்பவர்க்கு அடியேன்) வரிகள் உள்ள வளையல் அணிந்த மானி' என்பவருக்கும், நேசன்' என்பவருக்கும் அடியேன் சோழ அரசன் ஆகி உலகத்தை ஆட்சி செய்த செங்கணான் என்பவர்க்கு அடியேன் திருநீலகண்ட (யாழ்ப்) பானர் என்பவருக்கும் அடியேன் என் தந்தை - சிவ பெருமானுடைய திருவடியை அடைந்தவர் சடையனார் . (என்தாய்) 'இசைஞானியார்' இவர்களுக்கு மகன், திருநாவலூர்' என்ற ஊர்த்தலைவன் - அப்படிப்பட்டவன் 'ஆரூரன்' அவன் அடிமை என்று கூறிய இப்பதிகத்தைக் கேட்டு மகிழ்பவர்கள் திரு ஆரூரில் உள்ள இறைவனுக்கு அன்பர் ஆவார்கள். I am a devotee of Poosalar of Thiruninravūr_ who chants the Vedas, Maani who wears bangles and Nesa. am a devotee of the Chola King Senganan who reigned the Pandya country also. I am a devotee of Thiru Neela kanta Yaazhppanar. I am a devotee of my father Sadayan who attained the fee of the Lord. I am the son of Isai Gnaniyar. I am the King of Thiru Navalur. Those who rejoice on hearing the songs of this devotee, will become the devotees of the Lord at Thiru Arur. (23) இறைவன் திருநாமத்தைச் சொல்வதும் கேட்பதும் நல்லது. அதற்கு ஒரு எளிய முறையை நம் முன்னோர் கையாண்டனர். அதாவது தம் குழந்தைகளுக்குத் தெய்வப் பெயர்களை இடுவது பழக்கம். தம் குழந்தையை அழைக்கும் பொழுதும் நினைக்கும் பொழுதும் தெய்வத்தின் பெயரைக் கூறும் வாய்ப்பு ஏற்படுகிறது. முருகன் என்று பெயர்வைத்தால், எப்பொழுதும் முருகா என்று அழைப்போம் அல்லவா தெய்வப் பெயர் அல்லாது வேறு பெயர்கள் வைத்தால் இந்த இரட்டிப்புப் பயன் கிடைக்காது. இறுதிக் காலத்திலும் நாம் அறியாமலே தெய்வப்பெயர் அழைக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. ஆகவே குழந்தைகட்குக் கடவுட் பெயரை வைப்பது நன்னெறியாகும். 46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/56&oldid=833617" இலிருந்து மீள்விக்கப்பட்டது