பக்கம்:சிவ வழிபாடு.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலைத்து இருக்கின்றன. விரிந்த மனப்பான்மை இருந்தால் வேறுபாடுகள் காணப்படமாட்டா. எல்லாரும் இறைவன் முன் சமமே. பணக்காரன் இவன் என்று யமன் வராமல் இருப்பதில்லை. இவன் ஏழை ஆகையால் இவன் உயிரை எளிதில் கவரலாம் என்று யமன் வருவதில்லை. எந்த மொழி பேசினாலும், எந்த நாட்டில் இருந்தாலும், எந்தக் குலத்தில் பிறந்தாலும் உணர்ச்சிகள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. ஆகவே உயர்வு தாழ்வு வேறுபாடுகள் நீங்கிய சமுதாயம் அமைந்தால் அந்த நிலையே மகிழ்ச்சி தரும். இந்த உலகமே மோகூடி உலகமாகத் திகழும். திருச்சிற்றம்பலம் நாடகத்தால் உன் அடியார்போல் நடித்து நான் நடுவே Naadagaththaal un adiyaarpõl nadiththu naan naduve விடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் Veedagaththē pugundhiduvaan migapperidhurn viraikindrēn ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்ப உனக் என் Aadagachcheer mannikkundrē idaiyarraa anbu unakk uen ஊடகத்தே நின்று உருகத் தந்தருள் எம் உடையானே Udagaththē nindru urugath thandharu|| em udaiyaañe. நாடகத்தில் நடிப்பது போல உன் அடியார் போல் நான் நடித்தேன். அவர்கள் வீடு அடையும் பொழுது அவர்களுக்கு நடுவில் இருந்து கொண்டு புகுவதற்கு நான் மிகவும் வேகமாக இருக்கிறேன். பொன் பொதிந்த-சிறப்பு உடைய-மணிகள் பதித்த-குன்று போன்றவனே! உன்னிடத்தில் நீங்காத அன்பு என் மனத்தில் இருக்க வேண்டும் நிலைத்து உருகுமாறு செய்ய வேண்டும், இங்ங்னம் நீ அருள் செய் என்னை அடிமையாக | acted as if in a drama like a true devotee. When they enter Bliss, in their midst, I desire to enter in haste. Oh golden glorious Hill of gems! I yearn for ceaseless love to You. The love should be inmy heart and melt (the soul). Grant methis! Oh Possessor of myself! 60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/70&oldid=833651" இலிருந்து மீள்விக்கப்பட்டது