பக்கம்:சிவ வழிபாடு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு Vaazhgindraay vaazhaadha negnjame valvinaippattu ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே Aazhgindraay aazhaarnal Каарpaanai eththaathē சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும் Suzhgindraay kedu unakkuch cholkindrēn palkaalum வீழ்கின்றாய் நீ அவலக் கடலாய வெள்ளத்தே. Veezhkindraay nee avalak kadalaaya vellllaththē. திருச்சிற்றம்பலம் வாழத் தெரியாத நெஞ்சமே! நீயும் வாழ்கிறாய். கொடிய வினையில் அகப்பட்டு அதில் மூழ்கி இருக்கிறாய். அதில் மூழ்கிவிடாமல் காக்கும் கடவுளை நீ ஏத்தாமல் கேடுவரும் செயல்களைச் செய்யச் (சூழ்ச்சி) செய்கிறாய். உனக்குப் பலதடவை சொல்கிறேன். நீ துன்பம் ஆகிய கடல் வெள்ளத்தில் வீழ்கிறாய்! 1 * * You survive Ol Mind who is incapable of living! You are caught within the strong deeds and immersed in them. The Lord saves you from being immersed in them. Him you do not adore. But you scheme to do evil deeds. I advise you many a time. You fall into the waters of the ocean of grief. (29) இந்த உடம்பு ஐம்பூதங்களால் ஆகியது. ஐந்து பொறிகளை உடையது; ஒவ்வொரு பொறிக்கு ஒவ்வொரு உணர்ச்சி உண்டு. மெய் என்பது உடம்பு. இதற்கு ஊற்றுனர்ச்சி உண்டு. வாய்-இதற்குச் சுவை உணர்ச்சி உண்டு கண்-இதற்கு ஒளி உணர்ச்சி, மூக்கு இதற்கு முகர்தல் உணர்ச்சி, செவி-இதற்குக் கேட்கும் உணர்ச்சி, இவ்வுணர்ச்சிகள் ஒத்து இருக்கவேண்டும். பிறந்து வளர்கிறபோது இவை மிகினும் குறையினும் வாழ்க்கை சுகமாக இருக்காது. அவ்வுணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திச் சமமாகக் கொண்டு இருக்கவேண்டும். எது மிகுந்தாலும் உடம்புக்கு ஊறுபாடு நேரிடும். ஆகவே வாழ்க்கை நன்றாக அமைக்க விரும்புவோர் இந்த உணர்ச்சிகளைச் சமமாகக் கொண்டிருக்கப் பழகவேண்டும். 61

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/71&oldid=833653" இலிருந்து மீள்விக்கப்பட்டது