பக்கம்:சிவ வழிபாடு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(30) இறைவன் நிலமாக இருக்கிறான். நீராக இருக்கிறான். தீயாக இருக்கிறான்; காற்றாக இருக்கிறான். சந்திரன் ஆக இருக்கிறான். சூரியனாக இருக்கிறான். ஆகாயமாகவும் இருக்கிறான்; நிலத்தில் திண்மை, நீரில் குளிர்ச்சி, தீயில் வெம்மை, காற்றில் இனிமை, சந்திரனில் தண்ணொளி சூரியனில் வெம்மை ஒளி உள்ளன. இவற்றுள் எவை இல்லை என்றாலும் உயிர்வாழ முடியுமா? இவற்றை இயற்கையின் கூறுகள் என்று எல்லோரும் கூறுவோம். இவ்வியற்கைக் கூறுகள் நம் நலனுக்காகவே இருக்கின்றன. அவற்றை நம்மால் செயற்கையாக உண்டு பண்ண முடியாது. ஆகவே அவற்றை நன்முறையில் வைத்துப் பயன்படுத்திக் கொள்வதுவே முறை நல்ல பண்பும் ஆகும். திருச்சிற்றம்பலம் பாரொடு விண்ணாய்ப் பரந்த எம்பரனே Paarodu vinnnaayp parandha emparanē பற்று நான் மற்று இலேன் கண்டாய் patrru naan ThatTTU ilēn kanndaay ெேராடு பொலிவாய் சிவபுரத்து அரசே Seerodu polivaay Sivapuraththu arasē திருப்பெரும்துறை உறை சிவனே Thirupperumthurrai urrai Sivanē யாரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் Yaarodu nogēn aarkku eduthtհս uraikken ஆண்டநீ அருளிலை ஆனால் aanndanee arullilai aanaal வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் Vaarkadal ulagil vazhgilēn kanndaay வருக என்று அருள் புரியாயே. Varսցa endru aru|| puriyaayē. 64

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/74&oldid=833659" இலிருந்து மீள்விக்கப்பட்டது