பக்கம்:சிவ வழிபாடு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சிற்றம்பலம் குற்றம் இல்லாத பழமையான புகழ் உடையவள் உமை, அந்த உமையை ஒரு பாகத்தில் கொண்டவனே! நீ தவிர எனக்கு வேறு துணை இல்லை; செழிப்பான பிறையை அணிந்தவனே! சிவலோகத்தில் இருக்கும் தலைவனே! திருப்பெருந்துறையில் வசிக்கின்ற சிவபெருமானே! நான் பிறரை வணங்குவேனோ? துதிப்பேனோ? எனக்கு அவர்கள் துணை என்று நினைப்பேனோ? நீயே சொல். இளமையான எருதை வாகனமாக உடையவனே! என்னால் வாழ முடியாது. 'வருவாயாக என்று என்னை அழைத்து அருள் செய். Oh Lord having Uma- the spotiess and renowned-in Your form! I have no other except you to support me. Oh ye wearer of crescent moon! the king of Sivalóka. Oh Siva residing at Thirupperunthurai! Shall | bow down? Shall praise others? Shall I consider them as my aid? Please tell me. O Lord riding an young bull! I cannot live! look you! Please bid me to go to you and bestow grace. (31) இந்த உலகம் எதனால் ஆகியது: மண், கல் உள்ளே நீர் இன்னும் எத்தனையோ பொருள்கள். ஒரிடத்தில் மேடு, ஒரிடத்தில் பள்ளம், ஒரு பகுதியில் மலை, காடு ஒரு பகுதியில் வெறும் மணல், ஒரிடத்தில் செழிப்பான மண் ஒருபகுதியில் சுண்ணாம்புக்கல் பொருந்திய விளைவுக்குப் பயன்படாத பகுதி, ஒரு பகுதியில் பலமாதங்களில் பனிப் படலமே இருக்கும்; மரம் செடிவளர்ச்சி இல்லை. ஒரு பகுதியில் வெறும் நீர்ப்பகுதியே அவற்றின் நடுவில் சிறுசிறு தீவுப் பகுதி. எத்தகைய இடத்திலும் உயிர் இனங்கள் உண்டு மக்களும் வாழ்கிறார்கள். ஒருபகுதியில் இரவு பகல் ஒரே அளவு தட்ப வெட்பம் சமமாக இருப்பது மழை பெய்தல், நல்ல விளைவு. எல்லா வசதிகளும் இருக்கும். இங்கும் மக்கட்கூட்டம் உண்டு. இத்தகைய வசதிகள் படைத்த இடத்தில் பிறக்கும் ஊழ் எப்படிக் கிடைத்தது? அதைப்பற்றிச் சிந்திக்க வேண்டும் அது நமக்கு இறைவன் கொடுத்த அருட்கொடை என்று அறிவதே அறிவுடைமை ஆகும். 66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/76&oldid=833663" இலிருந்து மீள்விக்கப்பட்டது